மேலும் அறிய

IND vs ENG 4th Test: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்.. ராஞ்சி மைதானத்தில் ரோகித் சர்மா படைக்கவிருக்கும் 10 சாதனைகள்! லிஸ்ட் இதோ!

ராஞ்சி மைதானத்தில் ரோகித் சர்மா படைக்கவிருக்கும் சாதனைகளின் லிஸ்ட்டை இங்கே பார்ப்போம்

இந்தியா - இங்கிலாந்து 4-வது டெஸ்ட்:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறதுஅதன்படிமுதல் போட்டியில் இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து அணிஇரண்டாவது போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுஇந்நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 15 ஆம் தேதி குஜராத் மாநிலம் ராஜ்கோட் சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றதுஇந்த போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி ராஞ்சியில்  உள்ள ஜேஎஸ்சிஏ சர்வதேச மைதானத்தில் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. முன்னதாக ராஞ்சி மைதானத்தில், அனைத்து வடிவ போட்டிகளிலும் 8 இன்னிங்ஸ்களில் 52.00 சராசரியுடன் விளையாடி அற்புதமான சாதனை படைத்திருக்கிறார் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா. முன்னதாக கடந்த 2019 ஆம் ஆண்டு இதே மைதானத்தில் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார் ரோகித் சர்மா. அதன்படி, 83.13 ஸ்ட்ரைக் ரேட்டில் 28 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 212 ரன்கள் எடுத்தார்.

ராஞ்சி டெஸ்டில் ரோகித் சர்மா படைக்கவிருக்கும் சாதனைகள்:

  • இதுவரை ரோகித் சர்மா தான் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 3977 ரன்களை எடுத்துள்ளார். 4000 ரன்களை தொட இன்னும் 33 ரன்களை ரன்களே தேவைப்படும் சூழலில் ராஞ்சி டெஸ்டில் இந்த சாதனையை செய்வார். அந்த வகையில் 4000 ரன்களை கடந்த 17-வது இந்திய வீரர் ஆவார்.
  • ஒரு கேப்டனாக 930 டெஸ்ட் ரன்களை எடுத்துள்ள ரோகித் சர்மா 70 ரன்களை எடுத்தால் 1000 டெஸ்ட் ரன்களை கடந்த 10வது இந்திய கேப்டன் என்ற பெருமையைப் பெறுவார்.
  • சர்வதேச அளவில் அனைத்து வகையான டெஸ்ட் போட்டிகளிலும் இதுவரை 593 சிக்ஸர்களை பறக்கவிட்டுள்ள ரோகித் சர்மாவிற்கு 600 சிக்ஸர்களை தொடுவதற்கு இன்னும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இந்த சாதனையை செய்யும் பட்சத்தில்  அனைத்து சர்வதேச வடிவங்களிலும் 600 சிக்ஸர்களை எட்டிய முதல் பேட்டர் ஆவார்.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 50 சிக்சர்களை எட்ட ரோகித் சர்மாவிற்க (48) இன்னும் இரண்டு சிக்ஸர்கள் தேவை. பென் ஸ்டோக்ஸுக்குப் பிறகு இந்த சாதனையைப் படைத்தால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் 50 சிக்சர்களை இரண்டாவது பேட்டர் ஆவார். ஸ்டோக்ஸ் தற்போது 78 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார்.
  • முதல் தர போட்டிகளில் 8963 ரன்களை எடுத்துள்ள ரோகித் சர்மாவிற்கு 9000 முதல் தர ரன்களை முடிக்க 37 ரன்கள் தேவைபடுகிறது.
  • ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் தொடக்க ஆட்டக்காரராக அதிக ரன் குவித்த வீரராக ஆவதற்கு இன்னும் 32 ரன்கள் தேவை படுகிறது. தற்போது டேவிட் வார்னர் 2423 ரன்களுடன் முதல் இடத்தில் இருக்கிறார். ரோகித் சர்மா 2392 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
  • இங்கிலாந்துக்கு எதிராக 1000 டெஸ்ட் ரன்களை முடிக்க ரோகித் ஷர்மாவிற்கு இன்னும் 13 ரன்கள் தேவை. 13 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் இந்த சாதனையை எட்டிய 16 வது இந்திய வீரர் ஆவார். சுனில் கவாஸ்கருக்குப் பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் 1000 ரன்களைக் கடந்த இரண்டாவது இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஆவார்.
  • ஆசியாவில் நடைபெற்ற போட்டிகளில் 2500 டெஸ்ட் ரன்களை முடிக்க ரோகித் சர்மாவுக்கு (2450) 50 ரன்கள் தேவை.
  • டேவிட் வார்னர் (49), சச்சின் டெண்டுல்கர் (45) ஆகியோருக்குப் பிறகு, கிறிஸ் கெய்லை (42) விஞ்சவும், தொடக்க ஆட்டக்காரர்களில் மூன்றாவது அதிக சதம் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற ரோகத் சர்மா (42) சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் ஒரு சதம் தேவை.
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் ஒரு தொடக்க ஆட்டக்காரராக அதிக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற கிரேக் பிராத்வைட்டின் சாதனையை சமன் செய்ய ரோகித் ஷர்மாவுக்கு (14) இன்னும்ஒரு அரைசதம் தேவைபடுகிறது.

மேலும் படிக்க:IND vs ENG: இங்கிலாந்து அணியை வீழ்த்திய இந்தியா! இளம் வீரர்களை புகழ்ந்து தள்ளிய கேப்டன் ரோகித் சர்மா!

மேலும் படிக்க:MS Dhoni: ஐ.பி.எல் தொடரில் 16 ஆண்டுகள் நிறைவு...தோனியை கொண்டாடும் ரசிகர்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Rahul Gandhi Warning : ’’அழிவை நோக்கி நகரும் டெல்லி!மிகப்பெரிய ஆபத்தில் இந்தியா!’’எச்சரிக்கும் ராகுல்கடுப்பேற்றிய நிர்வாகிகள்! கிளம்பிய தமிழிசை,வானதி! ஆபரேஷன் அதிமுகSathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இன்னைக்கு ஒரு புடி" கயானாவில் பிரதமர் மோடிக்கு சூப்பர் விருந்து.. மெய் மறந்துட்டாரு!
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
TN Public Holidays: 2025 ஆம் ஆண்டிற்கான பொதுவிடுமுறை நாட்கள் அறிவிப்பு - மொத்தம் எத்தனை நாட்கள் தெரியுமா? மொத்த லிஸ்ட்
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
மாணவர்கள் கவனத்திற்கு! வெளியானது 10, 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை! லிஸ்ட் இதோ
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ரஜினியை சந்தித்தது அரசியலுக்காகத்தான்! திடீர் சந்திப்புக்கு காரணம் என்ன? - மாற்றத்துக்கு தயாரான சீமான்
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை..  டிராபிக் குறையுமா?
ECR முதல் வேப்பம்பட்டு வரை.. மொத்தமாக மாறும் சென்னை.. செம்ம அப்டேட்டா இருக்கே!
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
நான் சொல்வதை கேளுங்க! விஜய்க்கு புரட்சித்தலைவரின் குணம்! - செல்லூர் ராஜு
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
களமிறக்கப்பட்ட 10,000 ராணுவ வீரர்கள்.. மீண்டும் பற்றி எரியும் மணிப்பூர்!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! அடுத்த 7 நாட்களுக்கு கனமழை இருக்கு.!மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
TN Rain Updates: உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி.!அடுத்த 7 நாட்களுக்கு கனமழை பெறும் மாவட்டங்கள் லிஸ்ட் இதோ.!
Embed widget