IND Vs Eng 4th T20: திருப்பிக் கொடுத்த இங்கிலாந்து..! கம்பேக் கொடுக்குமா இந்தியா? 4வது போட்டி, புனே மைதானம் எப்படி?
IND Vs Eng 4th T20: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டி20 போட்டி நாளை நடைபெற உள்ளது.
![IND Vs Eng 4th T20: திருப்பிக் கொடுத்த இங்கிலாந்து..! கம்பேக் கொடுக்குமா இந்தியா? 4வது போட்டி, புனே மைதானம் எப்படி? IND Vs Eng 4th T20I maharashtra cricket association pune stadium t20 stats records detail in tamil IND Vs Eng 4th T20: திருப்பிக் கொடுத்த இங்கிலாந்து..! கம்பேக் கொடுக்குமா இந்தியா? 4வது போட்டி, புனே மைதானம் எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/28/fb811ddf8db0641f0339d0b0e6990b741738026580483901_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
IND Vs Eng 4th T20: இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 போட்டி, நாளை புனே மைதானத்தில் நடைபெற உள்ளது.
திருப்பிக் கொடுத்த இங்கிலாந்து:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி அட்டகாசமாக செயல்பட்டு வெற்றி பெற்றது. இதனால், மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை எளிதாக கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று, இந்திய அணிக்கு இங்கிலாந்து அணி பதிலடி கொடுத்தது. இதன் மூலம் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்த பட்லர் தலைமையிலான அணி, தொடரை வெல்வதற்கான வாய்ப்பையும் தக்கவைத்துள்ளது. இருப்பினும், தற்போதும் இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
கம்பேக் கொடுக்குமா இந்தியா?
ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இருந்த இந்தியாவிற்கு, ராஜ்கோட் போட்டி எதிர்பாராத முடிவாக இருந்தது. இந்நிலையில் தான், தொடரின் நான்காவது டி20 போட்டி புனேவில் நாளை நடைபெற உள்ளது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும் கண்டு களிக்கலாம். அதேநேரம், ஹாட் ஸ்டார் செயலியிலும் போட்டி நேரலையில் ஸ்ட்ரீம் செய்யப்படும். இதில் வென்று தொடரை கைப்பற்ற புனே மைதானம், இந்திய அணிக்கு சாதகமாக இருக்குமா? என்பதே தற்போதைய கேள்வியாகும்.
புனே மைதானம் எப்படி?
முதல் மூன்று போட்டிகளும் ஸ்லோ பிட்ச்களில் நடைபெற, நான்காவது போட்டி அதிரடி பேட்டிங்கிற்கு சாதகமான புனே மைதனாத்தில் நடைபெற உள்ளது. இந்த களத்தில் விக்கெட்டுகள் பெரும்பாலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதேநேரம், பந்துவீச்சாளர்கள் குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் களம் சாதகமாக இருக்கும்.
இந்தியாவிற்கு சாதகமா?
புனே மைதானத்தில் கடைசியாக 2023 ஆம் ஆண்டு டி20 சர்வதேசப் போட்டி நடைபெற்றது, அப்போது இந்தியா இலங்கைக்கு எதிராக 207 ரன்கள் என்ற இலக்கை எட்ட தவறியது. இந்த மைதானத்தில் 2 வெற்றி மற்றும் 2 தோல்விகளுடன், இந்தியாவின் செயல்பாடு கலவையாகவே உள்ளது. இருப்பினும், இங்கிலாந்திற்கு எதிராக அங்கு நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 4 போட்டிகளின் இரண்டு இன்னிங்ஸிகளில் 200 ரன்களுக்கும் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளது
புனே மைதான புள்ளி விவரங்கள்:
- போட்டிகள்: 4
- முதலில் பேட்டிங் செய்து வென்றது: 2 போட்டிகள்
- சேஸிங்கில் வென்றது: 2 போட்டிகள்
- அதிகபட்ச ஸ்கோர்: 2023ல் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் இலங்கை 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது
- குறைந்தபட்ச ஸ்கோர்: 2016ல் இலங்கைக்கு அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 101 ரன்களுக்கு ஆல் அவுட்
- அதிகபட்ச வெற்றிகரமான சேஸ்: 2012ல் இங்கிலாந்திற்கு எதிராக இந்தியா 17.5 ஓவர்களில் 158 ரன்களை 5 விக்கெட்டுகளை இழந்து சேஸ் செய்தது
- குறைந்த இலக்கில் வெற்றி: 2020ல் இலங்கைக்கு எதிரான போட்டியில் 201 ரன்கள் என்ற இலக்கை இந்தியா அணி டிஃபெண்ட் செய்து வெற்றி பெற்றது
- சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்: 166
- அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்: அக்சர் படேல் (இந்தியா) - 2023ல் இலங்கைக்கு எதிராக 31 பந்துகளில் 65 ரன்கள்
- சிறந்த பந்துவீச்சு: தசுன் ஷனகா (இலங்கை) - 2016 இல் இந்தியாவிற்கு எதிராக 16/ 3
- மொத்த சிக்ஸர்கள்: 58 சிக்ஸர்கள்
- மொத்த பவுண்டரிகள்: 87 பவுண்டரிகள்
- மொத்த 50s: 5 அரைசதங்கள்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)