மேலும் அறிய

IND vs ENG 3rd ODI LIVE : ரிஷப்பண்ட் சதத்தால் தொடரை வென்றது இந்தியா...!

IND vs ENG 3rd ODI LIVE : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான ஸ்கோர் நிலவரங்களை உடனுக்குடன் கீழே காணலாம்.

LIVE

Key Events
IND vs ENG 3rd ODI LIVE : ரிஷப்பண்ட் சதத்தால் தொடரை வென்றது இந்தியா...!

Background

இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்நிலையில் இந்தத் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்தப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று நடைபெறும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றால் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 8 வருடங்களுக்கு பிறகு இங்கிலாந்தில் தொடரை வென்றுவிடும். ஆகவே இந்திய அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது. 

இந்தியாவின் பிரச்சினைகள்:

எனினும் இந்திய அணிக்கு இந்தத் தொடரில் பந்துவீச்சை விட பேட்டிங் தான் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக இந்திய அணியின் நடுகள வீரர்கள் சரியாக விளையாடுவதில்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் மற்றும் தவான் ஒரு சில போட்டிகளில் மட்டுமே சிறப்பாக விளையாடி வருகின்றனர். அத்துடன் இந்திய அணியின் டெயில் எண்டர்கள் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பி வருகின்றனர். ஆகவே இந்திய அணியின் பந்துவீச்சு அளவிற்கு பேட்டிங் இந்தத் தொடரில் எடுபடவில்லை. 

விராட் கோலியின் ஃபார்ம்:

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி தற்போது மோசமான ஃபார்மில் உள்ளார். அவர் முதல் ஒருநாள் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அடுத்து இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி 16 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இந்தச் சூழலில் அவருக்கு அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முற்றிலும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே அதற்கு முன்பாக இந்த இன்னிங்ஸில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். 

கடைசியாக இவர் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஈடன் கார்டனில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதம் அடித்திருந்தார்.  அதன்பின்னர் விளையாடிய ஒரு டெஸ்ட் போட்டியில் கூட சதம் அடிக்கவில்லை.

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை பொருத்தவரை அதிலும் விராட் கோலி சமீபத்தில் சதம் அடிக்கவில்லை. கடைசியாக 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் விராட் கோலி சதம் அடித்தார். அந்தப் போட்டியில் விராட் கோலி 114* ரன்கள் எடுத்தார். அதன்பின்னர் விராட் கோலி சர்வதேச ஒருநாள் போட்டிகளிலும் சதம் அடிக்கவில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

22:46 PM (IST)  •  17 Jul 2022

ஒரே ஓவரில் 5 பவுண்டரிகள்...! ரிஷப்பண்ட் அபாரம்

டேவிட் வில்லி வீசிய 42வது ஓவரில் 5 பவுண்டரிகளை ரிஷப்பண்ட் விளாசி அசத்தினார்.

22:39 PM (IST)  •  17 Jul 2022

முதல் சதத்தை விளாசிய ரிஷப்பண்ட்...! வெற்றியின் விளிம்பில் இந்தியா..?

இந்திய வெற்றிக்காக பொறுப்புடன் ஆடிய ரிஷப்பண்ட் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார்.

22:35 PM (IST)  •  17 Jul 2022

60 பந்துகளில் 30 ரன்கள் தேவை...! வெற்றியைப் பெற்றுத்தருவாரா ரிஷப்பண்ட்..?

இந்தியாவின் வெற்றிக்கு 60 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்படுகிறது. ரிஷப்பண்ட் 96 ரன்களுடனும், ஜடேஜா 6 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

22:16 PM (IST)  •  17 Jul 2022

அபாரமாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா அவுட்..! வெற்றியுடன் முடிப்பாரா பண்ட்..?

இந்திய அணிக்காக அபாரமாக ஆடி 71 ரன்கள் விளாசிய ஹர்திக் பாண்ட்யா ப்ரைடன் பந்தில் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

22:00 PM (IST)  •  17 Jul 2022

ஹர்திக் - ரிஷப்பண்ட் பார்ட்னர்ஷிப் 100 ரன்கள்...! வெற்றியை நோக்கி இந்தியா..?

ஹர்திக் பாண்ட்யா மற்றும் ரிஷப்பண்ட் ஜோடி அபாரமாக ஆடி பார்ட்னர்ஷிப் 100 ரன்களை குவித்துள்ளனர்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.