Yashasvi Jaiswal: இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்... அதிரடியாக அரைசதம் விளாசிய ஜெஸ்வால்!
அதிராடியா விளையாடிய இந்திய அணி வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் விளாசினார்.
இந்தியா - இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி:
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று (ஜனவரி 25) ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, 246 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது இங்கிலாந்து அணி. அதன்படி, முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்டத்தில் 64.3 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது.
அரைசதம் விளாசிய ஜெய்ஸ்வால்:
இதனைத் தொடர்ந்து இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஜஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். இருவரும் இந்திய அணிக்கு அருமையான தொடக்கத்தை அமைத்துக்கொடுத்தனர். இருவரும் ஜோடி அமைத்து 4 ஓவர்களில் இந்திய அணிக்கு 35 ரன்களை எடுத்துக்கொடுத்தனர். இதில் அதிரடியாக விளையாடிய இந்திய அணியின் இளம் வீரர் யஜஸ்வி ஜெய்ஸ்வால் அரை சதத்தை பதிவு செய்தார். அதன்படி, 47 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 51 ரன்களை விளாசினார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் பதிவு செய்திருக்கும் இரண்டாவது அரைசதம் இது.
FIFTY FOR JAISWAL....!!!!!
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024
Fifty from just 47 balls - he has been dominating England attack, incredible batting from the youngster. 🫡 pic.twitter.com/Lak6HaEfnJ
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வீரர்கள் பாஸ்பால் முறையை பயன்படுத்தி இந்திய அணியினரை மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், பாஸ்பாலை பொய்யாக்கி ஜெய்ஸ்பால் ஆட்டம் ஆடியுள்ளார் ஜெய்ஸ்வால். முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானர் ஜெய்ஸ்வால். இதுவரை மொத்தம் 5 டெஸ்ட் போட்டிகலில் விளையாடியுள்ள இவர் 1 சதம் மற்றும் 1 அரைசதம் எடுத்திருக்கிறார். அதேபோல், 357 ரன்களை குவித்துள்ளார்.
Jaisball at Hyderabad....!!!!
— Johns. (@CricCrazyJohns) January 25, 2024
India 35 for 0 from just 4 overs. 🤯 pic.twitter.com/iTX4Em41U7
இவருடைய அதிகபட்ச ஸ்கோர் 171 என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கி இந்திய அணிக்கு நல்ல ஸ்கோரை பெற்று தருவதில் வல்லவராக திகழும் ஜெய்ஸ்வால் இனி வரும் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி தன்னுடைய திறமையை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.
மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST: சுழலில் மாயாஜாலம் காட்டிய அஸ்வின் - ஜடேஜா... 246 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து அணி!
மேலும் படிக்க: IND VS ENG 1ST TEST:கும்ப்ளே - ஹர்பஜன் ஜோடியின் சாதனையை முறியடித்த அஸ்வின் - ஜடேஜா ஜோடி! அப்படி என்ன சாதனை?