மேலும் அறிய

IND vs AUS: கபில்தேவ் வைத்திருந்த நீண்டகால சாதனை.. ஒரே இன்னிங்ஸில் தகர்த்தெறிந்த ஜடேஜா..! அப்படி என்ன ரெக்கார்ட்?

ஆஸ்திரேலியா அணியை முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்குள் சுருட்ட இந்திய அணிக்கு, மிக முக்கிய காரணம் ஜடேஜா எடுத்த 5 விக்கெட்கள்தான். 

நாக்பூரில் தற்போது நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான நேற்றைய ஆட்டம் முடிவுக்கு வந்தது.  இதில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் குவித்துள்ளது. களத்தில் இடது கை பேட்ஸ் மேன்களான ரவீந்திர ஜடேஜாவும்(66), அக்‌ஷர் பட்டேலும்(52) அரைசதம் கடந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

கடந்த 5 மாதம் காயம் காரணமாக ஓய்வில் இருந்த ஜடேஜா, இந்த தொடரின் முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஆஸ்திரேலியா அணியை முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்குள் சுருட்ட இந்திய அணிக்கு, மிக முக்கிய காரணம் ஜடேஜா எடுத்த 5 விக்கெட்கள்தான். 

அதேபோல், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 240 க்கு 7 விக்கெட்கள் என்று தடுமாறியபோது, உள்ளே வந்த ஜடேஜா நிதான ஆட்டத்தை கடந்து அரைசதம் அடித்து விளையாகி வருகிறார். இந்த போட்டியில் ஜடேஜா அரைசதம் அடித்ததன்மூலம் புதிய சாதனையை தன்வசமாக்கியுள்ளார். 

சாதனை: 

இந்திய அணிக்காக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகமுறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மற்றும் அரைசதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் உலகக் கோப்பையை வென்று வந்த கபில் தேவ் முதலிடத்தில் இருந்தார். கபில் தேவ் இதற்கு முன்னதாக 4 முறை ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மற்றும் அரைசதம் அடித்திருந்தார். இந்தநிலையில், ரவீந்திர ஜடேஜா நேற்றைய நாளில் அரைசதம் அடித்ததன்மூலம் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மற்றும் அரைசதம் அடித்து 5 முறை இதை நிகழ்த்தி முதலிடத்திற்கு முன்னேறினார். இந்த பட்டியலில் தமிழக வீரர் அஷ்வின் 3 முறை இந்த சாதனை படைத்து 3வது இடத்தில் இருக்கிறார்.  

இரண்டாவது நாள் ஆட்டம்:

இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியதும் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் மர்பி சுழலில் சிக்கி, அஸ்வின், புஜாரா மற்றும்  விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அதேநேரம், மறுமுனையில் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவ்வப்போது பவுண்டரிகளையும் விளாசினார். இதன் மூலம், ரோகித் சர்மா 171 பந்துகளில் டெஸ்ட் போட்டிகளில் தனது 9வது சதத்தை பூர்த்தி செய்தார். இதில் 14 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். இவரும் 212 பந்துகளில் 120 ரன்கள் எடுத்த நிலையில் பேட் கம்மின்ஸ் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன் பின்னர் ஸ்ரீகர் பரத் களமிறங்க, அவரும் மர்ஃபி பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் தனது அறிமுகப் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்திய சாதனையை மார்ஃபி படைத்தார். மேலும், இந்திய அணிக்கு எதிரான போட்டியில்  அறிமுகமாகி, அறிமுக போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சிறப்பையும் மர்ஃபி பெற்றுள்ளார். 

அதனைத் தொடர்ந்து களமிறங்கிய அக்‌ஷர் பட்டேல், ஏற்கனவே களத்தில் நிதானமாக ஆடிக் கொண்டு இருந்த ஜடேஜாவுடன் கை கோர்த்தார். இருவரும் தொடர்ந்து நிதானமாக ஆடிவந்தாலும், அவ்வப்போது தவறான ஷாட்டுகளை அடித்தனர். இதனால் கொடுத்த கேட்ச் வாய்ப்புகளை தவறவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருவரும் இந்த வாய்ப்பினை மிகவும் சரியாக பயன்படுத்தி அரைசதம் கடந்தனர். 

இரண்டாவது நாளான நேற்று மட்டும் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து, 244 ரன்களை எடுத்துள்ளது. இதில் நான்கு விக்கெட்டுகள் மர்ஃபி வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது. 

இதன் மூலம் இந்திய அணி 144 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு நாள் ஆட்ட முடிவினை வைத்து பார்க்கும் போது இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தலைப்பு செய்திகள்

18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
ஆஸ்திரேலியாவுக்கே ஆப்படிச்ச வங்கதேசம்! டெஸ்டில் வரலாற்று வெற்றி! கங்காரு பாய்சை கொத்துக்கறி போட்ட நாகின் படை!
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Embed widget