IND vs AUS : திரும்பும் தேஜாவு! இருங்க பாய் சொல்லுமா இந்தியா?
IND vs AUS BGT 2024 : கடந்த 2011-12 ஆண்டு அடுத்தடுத்து இரண்டு வெளிநாட்டு தொடர்களில் ஒயிட் வாஷ் ஆனது. அந்த தொடருக்கும் இந்த தொடருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடர் நாளை தொடங்க உள்ளது. இந்த நிலையில் இந்திய அணி கடைசியாக கடந்த 2011-12 ஆண்டு அடுத்தடுத்து இரண்டு வெளிநாட்டு தொடர்களில் ஒயிட் வாஷ் ஆனது. அந்த தொடருக்கும் இந்த தொடருக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. அது என்ன என்பதை இந்த தொகுப்பில் காணலாம்.
பார்டர்-கவாஸ்கர் தொடர்:
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் பார்டர்-கவாஸ்கர் தொடர் என்று அழைக்கப்படுகிறது. 1995 ஆம் ஆண்டு வரை சாதராண டெஸ்ட் தொடராக மட்டுமே போட்டிகள் நடைப்பெற்றது. 1996 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுள் ஒருவரான சுனில் கவாஸ்கர் மற்றும் ஆஸ்திரேலிய ஜாம்பாவன் அலன் பார்டர் ஆகியோரின் பெயரில் இந்த தொடரானது நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பத்து ஆண்டுகளாக இந்திய அணியின் வசமே பார்டர் கவாஸ்கர் கோப்பை உள்ளது. கடைசியாக 2014-15 ஆண்டுகளில் ஆஸ்திரேலிய அணி வென்றிருந்தது. அதன் பின்னர் இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது.
இதையும் படிங்க:IND VS AUS : "என்ன திமிர் இருக்கனும்.." இந்திய வீரர்களை மட்டம் தட்டிய கம்மின்ஸ்.. கிழித்து தொடங்கவிடும் ரசிகர்கள்
திரும்பும் தேஜாவு:
2024 ஆஸ்திரேலிய தொடருக்கும் 2011 தொடருக்கும் ஒரு மிகப்பெரிய ஒற்றுமை உள்ளது. அது என்னவென்றால் 2011 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் நடந்த டெஸ்ட் தொடரை 1-1 என்கிற கணக்கில் சமன் செய்திருக்கும் அதே போல இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தென் ஆப்பிரிக்க டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்திருந்தது. அதே போல் அந்த ஆண்டில் இந்திய அணி ஒரு நாள் உலகக்கோப்பை வென்றிருந்தது. இந்த ஆண்டில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை வென்று இருந்தது.
ஆஸ்திரேலியா vs இந்தியா.. கோப்பையுடன் captains #bordergavaskartrophy2024 #Bumrah #PatCummins pic.twitter.com/KLmAoQHBHF
— ABP Nadu (@abpnadu) November 21, 2024
2011 ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-0 என்கிற கணக்கில் தோற்று இருந்தது. அதே போல இந்த ஆண்டும் இந்திய நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய 3-0 என்கிற கணக்கில் தோற்று ஒயிட் வாஷ் ஆனது. 2011 ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த தொடரையும் இந்திய அணி 4-0 என்று ஒயிட் வாஷ் ஆனது.
இப்படி 2011ஆம் ஆண்டில் என்னதெல்லாம் நடந்ததோ அதே போல 2011-ல் நடந்த அனைத்தும் ஒரே போல நிகழ்ந்துள்ளது. அதனால் இந்த தொடரையும் அதே போல இந்திய அணி இழந்துவிடுமோ என்கிற ஐயம் தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.