நான்ஸ்டிக் பேன்களை பயன்படுத்தும் முன்னர் அதன் மீது எண்ணெய் தேய்க்கவும். கோட்டிங் போகாமல் பாதுகாக்கப்படும்.தோசைக்கல்லில் துணி கொண்டு எண்ணெய்யை தேய்த்து எடுப்பார்களே அந்த அளவுக்கு தேய்த்தால் போதுமானது.
நான்ஸ்டிக் பேன் உடன் மரக்கரண்டி கொடுப்பார்கள். எவர்சில்வர் கரண்டிகளைப் பயன்படுத்துவோம். அது பேனில் உள்ள கோட்டிங்கை நீக்கிவிடும். மரக்கரண்டி அல்லது சிலிகான் கரண்டிகளை மட்டுமே பயன்படுத்துவது நல்லது.
நான்ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தி சமைக்கும்போது அடுப்பின் தீயை சிம்மில் வைத்து பயன்படுத்தலாம். இது நான்ஸ்டிக் பாத்திரத்தின் நிறம் மாறாமல் பாதுகாக்கும்.
நான்ஸ்டிக் பேனை சுத்தம் செய்வதில் கவனம் தேவை. பேனை பயன்படுத்தியவுடன் அதன் மீது உடனே குளிர்ந்த நீரை ஊற்றக் கூடாது. இது பேனில் தெர்மல் ஷாக் ஏற்படச் செய்யும்.
நான்ஸ்டிக் பேனின் கோட்டிங் வெகு சீக்கிரமே போய்விடும்.சிறிது பாத்திரம் கழுவும் திரவத்தை தண்ணீரில் கலந்து ஊற்றிவைத்துவிட்டு பின்னர் ஸ்பாஞ்ச் கொண்டு சுத்தம் செய்வது சரியான முறையாகும்.
அதன் மீது வேறு பாத்திரங்களை வைப்பது. அல்லது ஒரு நான்ஸ்டிக் பாத்திரம் மீது இன்னொன்றை வைப்பது கூடாது.
டெஃப்லான் பூச்சால் உடல் ஆரோக்கியத்துக்கு அபாயங்கள் ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.
இரும்பு, ஸ்டெய்ன்லஸ் ஸ்டீல் பாத்திரங்கள் காலங்காலமாக நீடிக்கக்கூடியவை. உடல் ஆரோக்கியத்துக்குத் தீங்கு விளைவிக்காதவை என்றும் கூறப்படுகிறது.
இந்த டிப்ஸ் பின்பற்றி பாருங்க.