IND vs AUS 2nd T20 LIVE: மாஸ் காட்டிய ரோகித்.. எளிதாக ஆஸியை வீழ்த்திய இந்தியா...
IND vs AUS 2nd T20 LIVE Updates: இந்தியா-ஆஸ்திரேலியா முதல் டி20 போட்டியின் உடனுக்குடன் தகவல்கள் இதோ...
LIVE
Background
இந்திய-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நாக்பூரில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நாக்பூர் மைதானத்தில் இன்று மழை பெய்யும் சூழல் அதிகமாக உள்ளது. இதன்காரணமாக போட்டி தாமதமாக தொடங்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இன்றைய போட்டியில் காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்த பும்ரா இந்திய அணியில் இடம்பெறுவார் என்று கருதப்படுகிறது. உமேஷ் யாதவிற்கு பதிலாக அவர் அணியில் இடம்பெறுவார்.
இன்றைய போட்டியில், இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பிடிப்பாரா? என்று ஆர்வமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனினும் கடந்த போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் தான் சொதப்பியது. ஆகவே பந்துவீச்சில் சில மாற்றங்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்தவரை எந்தவித மாற்றமும் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய போட்டியில் இந்திய அணி டெர்த் ஓவர்களில் சொதப்பாமல் பந்துவீசும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். குறிப்பாக அனுபவ பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் கடைசியாக விளையாடிய 3 டி20 போட்டிகளிலும் டெர்த் ஓவரில் அதிகமான ரன்களை கொடுத்து வந்தார். அவர் இன்று அந்த தவறு திருத்தி கொண்டால் இந்திய அணிக்கு அது கூடுதல் பலமாக அமையும். காயத்திற்கு பிறகு பும்ரா இந்திய அணியில் இடம்பெறுவதால் இந்திய பந்துவீச்சு பலம் அடையும் என்று தெரிகிறது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை அந்த அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று கருதப்படுகிறது. முதல் போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சில் அனுபவ வீரர் கம்மின்ஸ் ரன்களை வாரி வழங்கினார். ஆகவே அந்த அணி பந்துவீச்சில் மட்டும் அதிக கவனம் செலுத்தும் என்று கருதப்படுகிறது.
இந்தியா அணி விவரம்:
ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல் , புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஹர்ஷல் படேல், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா
ஆஸ்திரேலியா அணி விவரம்:
ஆரோன் பின்ச் (கேப்டன்), சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டிம் டேவிட், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜம்பா
டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய இரண்டு அணிகளுக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் களமிறங்குகிறது. எனவே டி20 உலகக் கோப்பைக்கு முன்பாக இந்திய அணிக்கு இந்த இரண்டு தொடர்களும் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
IND vs AUS 2nd T20 LIVE: ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா..!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றுள்ளது.
IND vs AUS 2nd T20 LIVE: இந்திய வெற்றிக்கு 12 பந்துகளில் 22 ரன்கள் தேவை
இந்திய அணி வெற்றி பெற இன்னும் 12 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்படுகிறது.
IND vs AUS 2nd T20 LIVE: ஒரே ஓவரில் கோலி, சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்திய ஸம்பா
ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சாளர் ஆடம் ஸம்பா ஒரே ஓவரில் கோலி மற்றும் சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை எடுத்தார்.
IND vs AUS 2nd T20 LIVE: மூன்று ஓவர்களின் முடிவில் இந்தியா 40/1
3 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 40 ரன்கள் எடுத்திருந்தது.
IND vs AUS 2nd T20 LIVE: முதல் ஓவரின் முடிவில் இந்திய அணி 20/0
முதல் ஓவரின் முடிவில் இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 20 ரன்கள் எடுத்திருந்தது.