ENG vs PAK, 1 Innings Highlight: பாகிஸ்தான் பேட்களை பந்துகளால் பந்தாடிய சுட்டிக்குழந்தை...! 137 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து!
ICC T20 WC 2022, IND vs PAK: மெல்போர்னில் தொடங்கிய பைனல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பாகிஸ்தான் - இங்கிலாந்து இடையிலான இறுதிப்போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் தங்களது இரண்டாவது கோப்பையை வெல்ல இன்று பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
மெல்போர்னில் தொடங்கிய ஆட்டத்தில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்தது. 138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து விளையாடவுள்ளது.
டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து எதிரான இறுதிப்போட்டியில் 2 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி பாகிஸ்தான் அணி 12 ரன்கள் எடுத்தது. சாம் கர்ரன் வீசிய 5 வது ஓவரில் 15 ரன்கள் எடுத்திருந்த ரிஸ்வான் க்ளீன் போல்டானார். இதையடுத்து, 8வது ஓவரின் முதல் பந்தில் முகமது ஹாரிஸ் ஆட்டமிழந்தார். அவர் ஸ்டோக்சிடம் கேட்ச் ஆனார். அடில் ரஷித் பந்துவீசினார். 8 ரன்களில் நடையைக் கட்டிய ஹாரிஸை தொடர்ந்து ஷான் மசூத் களமிறங்கினார்.
England are off to a good start in the #T20WorldCupFinal#PAKvENG | 📝 https://t.co/MnyacF7GtB pic.twitter.com/2w7XURbDvH
— ICC (@ICC) November 13, 2022
10 ஓவர்களுக்கு பாகிஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 68 ரன்கள் எடுத்தது. இதையடுத்து, இஃப்திகார் அகமது வந்தவேகத்தில் பெவிலியன் சென்றார். அவர் ஸ்டோக்ஸ் வீசிய பந்தில் ஜாஸ் பட்லரிடம் கேட்ச் ஆனார். 15 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு பாகிஸ்தான் 106 ரன்கள் எடுத்தது.
ஆட்டம் இவ்வாறாக சென்று கொண்டிருந்தபோது ஷான் மசூத் 38 ரன்கள் எடுத்திருந்தபோது சாம் கர்ரன் பந்துவீச்சில் லிவிங்ஸ்டனிடம் கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.
இதையடுத்து கிறிஸ் ஜோர்டன் வீசிய 18 ஆவது ஓவரில் ஷதாப் கான் ஆட்டமிழந்தார். அவர் அப்போது 20 ரன்கள் எடுத்திருந்தார். இந்த ஆட்டத்தில் சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளை அள்ளினார். அடுத்தபடியாக அடில் ரஷித் 2 விக்கெட்டுகளை சுருட்டினார்.
கடந்த 2019 ம் ஆண்டு நடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, டி20 உலகக் கோப்பை தொடரின் தொடக்கத்தில் தோல்வியுடன் தொடங்கியது. அதன் பிறகு மீண்டெழுந்து தொடர் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை பெற்றது. தொடர்ந்து நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான், கடந்த 1992ம் ஆண்டு இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஒருநாள் உலகக் கோப்பையை கைப்பற்றியது.
பாகிஸ்தான் அணியை போலவே இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களும் இந்த தொடர் முழுவதும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இங்கிலாந்து அணியில் ஒரு வீரர் சொதப்பினாலும் மற்ற வீரர்கள் சிறப்பாக வழிநடத்தி வெற்றியை பெற்று தருகின்றனர். இதன் காரணமாகவே இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.