மேலும் அறிய

ICC ODI Ranking: ஆஸி, இந்தியாவை ஓரம் கட்டி ஐசிசி ஒருநாள் தரவரிசையில் முதலிடம் பிடித்த பாகிஸ்தான்..!

ICC ODI Ranking: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அஸ்திரேலியா மற்றும் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்துள்ளது.

ICC ODI Ranking: ஐசிசி ஒருநாள் தரவரிசையில் அஸ்திரேலியா மற்றும் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி பாகிஸ்தான் அணி முதலிடம் பிடித்துள்ளது. 

கிரிக்கெட் போட்டியை சர்வதேச அளவில் விளையாடும் ஒவ்வெரு அணியும் மற்ற அணிகளை வெல்வது தொடங்கி தொடரை கைப்பற்றுவதுடன் மனதில் உள்ள ஒரு கனவாக இருக்கும் ஒரு இலக்கு என்றால் அது ஐசிசி தரவரிசையில் முதல் இடம் பிடிக்க வேண்டும் என்பதுதான். ஐசிசி தரவரிசையில் முதல் இடம் என்பது கிரிக்கெட் போட்டியை சர்வதேச அளவில் விளையாடும் அனைத்து அணிகளுக்கும் எளிதில் கிடைத்து விடுவதில்லை. 

தொடர் வெற்றிகள் மூலம் தான் ஐசிசி தரவரிசையில் முதலிடம் எட்ட முடியும். அவ்வகையில் இம்முறை இதுவரை வரலாற்றில் ஐசிசி தரவரிசையில் முதலிடம் எட்டாத பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போடிகள் கொண்ட தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளையும் வென்று தொடரையும் கைப்பற்றியதுடன் ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடருக்கு முன்னர் பாகிஸ்தான் அணி 5வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.  மிகவும் பலமான பாகிஸ்தான் அணி 1992ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் வென்று உலகக்கோப்பையை வென்றது. உலககோப்பையையே வென்று இருந்தாலும், பாகிஸ்தான் அணியால் ஒருநாள் தொடரில் முதலிடம் எட்ட முடியவில்லை. 

பாகிஸ்தான் அணியின் இந்த வளர்ச்சிக்கு மிக முக்கியமாக பார்க்கப்படுவது அந்த அணியில் உள்ள வீரர்கள் தான் என்றாலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மிகவும் முக்கிய காரணமாக விளங்குகிறார். அதாவது, பாபர் அசாம் அணிக்குள் வந்த பிறகு பாகிஸ்தான் அணியின் போக்கும் வளர்ச்சியும் யாராலும் தடுக்க முடியாததாகிவிட்டது என கூறும் அளவிற்கு உள்ளது. தான் கேப்டனாக பொறுப்பேற்று மிக குறுகிய காலத்திலேயே பாகிஸ்தான் அணியை உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு ஐசிசி தரவரிசையில் முதல் இடத்திற்கு அழைத்து வந்துள்ளார். இவரது தலைமையில் பாகிஸ்தான் அணி இதுவரை 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடி அவற்றில் 17 போட்டிகளில் வென்றுள்ளது. மேலும், 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ள பாகிஸ்தான் அணி, ஒரு போட்டியில் டிராவும் செய்துள்ளது.  ஐசிசியின் புள்ளிவிபரங்களின் படி, 29 போட்டிகளில் விளையாடி 113 ரேட்டிங்குடன் முதல் இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. 

பாகிஸ்தான் அணியைப் போல் ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் 113 ரேட்டிங்குடன் இருந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு முதலிடம் வழங்கக் காரணம் பாகிஸ்தான் அணி மிகக்குறைந்த போட்டிகளில் 113 ரேட்டிங்கை எட்டியுள்ளது. ஆனால் ஆஸ்திரேலியா 35 போட்டிகளிலும் இந்தியா 47 போட்டிகளிலும் விளையாடிதான் 113 ரேட்டிங்கை எட்டியுள்ளது. எனவே ஐசிசி பாகிஸ்தான் அணிக்கு முதலிடம் வழங்கியுள்ளது. அடுத்த ஒன்றரை மாதங்களுக்கு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு ஒருநாள் போட்டி என்பதே கிடையாது என்பதால் பாகிஸ்தான்தான் இந்த காலகட்டத்திலும் முதலிடம் வகிக்கும். அதன் பின்னர் தரவரிசைப்பட்டியலில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITAL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"இனிதான் ஆட்டமே இருக்கு" போராட்ட களத்தில் விஜய்.. பரந்தூருக்கு பறக்கும் தவெக படை!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்ததா அதிமுக? ஜகா வாங்கும் இபிஎஸ்! மீட்டிங்கில் நடந்தது என்ன?
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
CM Stalin: சொல்லி அடித்த முதலமைச்சர் ஸ்டாலின்..! சட்டப்பேரவையில் சவாலில் தோற்ற எடப்பாடி பழனிசாமி - பொள்ளாச்சி விவகாரம்
EPS attacks Stalin;
"ஒருவழியா ஸ்டாலின் ஒத்துக்கிட்டார்"; திமுகவின் இரட்டை வேடம் அம்பலம் - இபிஎஸ்
Irunga Bhai:
Irunga Bhai: "இருங்க பாய்" குரலுக்குச் சொந்தக்காரர் இவரா? இன்ஸ்டாகிராமை அலறவிட்ட சாமானியன்!
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
100 நாள் வேலைத் திட்டத்தை குறைக்க ஊராட்சிகள் தரம் உயர்வா? சட்டசபையில் அமைச்சர் பரபரப்பு பதில்
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
Ajithkumar Car Race: கார் ரேஸில் இருந்து அஜித் விலகல்! சந்தோஷப்படவா? கவலைப்படவா?
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
TVK Vijay: ”இன்னும் எத்தனை நாள் ஏமாத்துவீங்க” திமுகவை லெஃப்ட், ரைட் வாங்கிய தவெக தலைவர் விஜய்
Embed widget