இந்தியா vs இங்கிலாந்து முதல் டெஸ்ட் போட்டி: லீட்ஸில் வானிலை எப்படி இருக்கும்? முழு விவரம்
Eng vs Ind: லீட்ஸ்சில் தொடங்கவுள்ள முதல் டெஸ்ட் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில் போட்டி நடைப்பெறும் ஐந்து தினங்களும் வானிலை எப்படி இருக்கும் என்பதை காணலாம்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெண்டுல்கர்-ஆண்டர்சன் தொடர் நாளை தொடங்கவுள்ளது. லீட்ஸ்சில் தொடங்கவுள்ள இந்தப் போட்டியை காண ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ள நிலையில் போட்டி நடைப்பெறும் ஐந்து தினங்களும் வானிலை எப்படி இருக்கும் என்பதை காணலாம்.
முதல் டெஸ்ட்க்கான ட்வானிலை நிலவரம்
நாள் 1 – ஜூன் 20 (வியாழக்கிழமை)
மழை பெய்ய வாய்ப்பு: 5–10%, வெப்பநிலை: 17°C முதல் 31°C வரை,
எதிர்பார்ப்பு: மழை பெய்யாமல் முதல் நாள் ஆட்டம் தடையின்றி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதல் நாள் ஆட்டம் முழுமையக நடைப்பெறும்.
நாள் 2 – ஜூன் 21 (வெள்ளிக்கிழமை)
மழை வாய்ப்பு: 60%, வெப்பநிலை: முதல் நாளைப் போலவே இருக்கும் என்றும் பிற்பகலில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இடையூறுகள் அல்லது செஷன்கள் நடைப்பெறமால் தடைப்பட வாய்ப்புள்ளது.
நாள் 3 – ஜூன் 22 (சனிக்கிழமை)
மழை வாய்ப்பு: 5–10%, வெப்பநிலை: 12°C முதல் 22°C வரை, வானிலை: முதல் நாள் போலவே — பெரும்பாலும் வறண்ட வானிலையே இருக்கும். முழு நாள் ஆட்டம் இருக்கும் என்று தெரிகிறது.
நாள் 4 – ஜூன் 23 (ஞாயிற்றுக்கிழமை)
மழை வாய்ப்பு: 25–30%, வெப்பநிலை: 13°C முதல் 19°C வரை, வானிலை முன்னறிவிப்பு: மழையால் சிறிய தாமதங்கள் ஏற்படலாம், ஆனால் பெரிய பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.
நாள் 5 – ஜூன் 24 (திங்கள்)
மழை வாய்ப்பு: 25–30%, வெப்பநிலை: 4 ஆம் நாளைப் போலவே, லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது, ஆனால் அது இறுதி நாளில் குறிப்பிடத்தக்க அளவில் ஆட்டத்தில் பாதிப்பை ஏற்ப்படுத்த வாய்ப்புள்ளது.
இரு அணியின் பிளேயிங் XI அணிகள்
இந்தியா: யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங்.
இங்கிலாந்து: ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங், ஷோயப் பஷீர்.
இந்தியா - இங்கிலாந்து: ஹெடிங்லே மைதானம்
பழமையான கிரிக்கெட் வரலாறு கொண்ட ஹெடிங்லே மைதானத்தில் இரு அணிகளும் இதுவரை 7 முறை மட்டுமே டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளன. இரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் போட்டிகள் இந்த மைதானத்தில் தொடர்ந்து நடைபெறுவதில்லை. சில நேரங்களில் 15 முதல் 20 ஆண்டுகள் வரை கூட இடைவெளி ஏற்பட்டுள்ளது.
கடைசியாக நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021ம் ஆண்டு நடந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று இருந்தது. அதற்கு முன்னதாக 1986 மற்றும் 2002ம் ஆண்டுகளில் நடந்த இரண்டு போட்டிகளிலும் இந்தியா அடுத்தடுத்து வெற்றிகளை குவித்தது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக இரு அணிகளும் இங்கு 7 முறை நேருக்கு நேர் மோதியதில், இங்கிலாந்து நான்கு முறையும், இந்தியா 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு போட்டி சமனில் முடிந்துள்ளது.





















