"ரோகித் ஷர்மாவுக்கு இது மிகப்பெரிய தொடராக இருக்கும்": இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கூறுவது ஏன்?
"ஸ்விங்கிங் சூழ்நிலையில் இங்கிலாந்துக்கு எதிராக அவர் காட்டிய அதே வகையான திறமையை காட்டினால் அவர் ஒரு சிறந்த அடித்தளத்தை கண்டிப்பாக அமைத்து தருவார்", என்றார்.
ரோகித் ஷர்மாவுக்கு இது மிகப்பெரிய தொடராக இருக்கும் என்று இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறியுள்ளார்.
டெஸ்ட் கேப்டனாக ரோகித் ஷர்மா
பிப்ரவரி 2022 இல் ரோஹித் ஷர்மா அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டதில் இருந்து இந்தியாவை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளது. அதில் ரோஹித் இரண்டில் மட்டுமே அணியை கேப்டனாக வழிநடத்தினார். அந்த இரண்டு போட்டிகள், கடந்த ஆண்டு பிப்ரவரியில் இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் விளையாடியது ஆகும். ஜூலை மாதம் இங்கிலாந்தில் ஒத்திவைக்கப்பட்ட ஐந்தாவது டெஸ்ட் மற்றும் டிசம்பரில் பங்களாதேஷில் ஆடிய இரண்டு டெஸ்ட் ஆகுயவற்றில் இருந்து காயம் காரணமாக வெளியேறி இருந்தார். அந்த போட்டிகளை கே.எல்.ராகுல் தலைமை தாங்கினார். இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவுடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாட உள்ளது. பிப்ரவரி 9 ஆம் தேதி அவர்கள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி
ரோகித்துக்கு இது பெரிய தொடர்
இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக இருக்கும் 35 வயதான ரோகித் ஷர்மாவுக்கு இது ஒரு பெரிய தொடராக இருக்கும் என்று கருதுகிறார். "ரோஹித்துக்கு இது ஒரு பெரிய தொடர், துரதிர்ஷ்டவசமாக, காயங்கள் அவரை 2015 முதல் 2018 வரை நிறைய டெஸ்ட் போட்டிகளில் ஆடவிடாமல் செய்தது. 2018 இல், அவர் நன்றாக பேட்டிங் செய்தபோதும், அவர் டெஸ்ட் போட்டிகளை தவறவிட வேண்டியிருந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட வீட்டிற்கு செல்ல வர விரும்பியதால் ஒரு டெஸ்ட் போட்டி மிஸ் ஆனது," என்று பங்கர் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் கூறினார்.
ரோகித் ஷர்மாவும் டெஸ்ட் கிரிக்கெட்டும்
அக்டோபர் 2019 இல் இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் வரை டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறிய வெற்றியைக் கண்டார் ரோஹித். 2021 இல் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-2 என இந்தியா சமன் செய்வதில் அவர் முக்கிய பங்கு வகித்தார், கோவிட் -19 வெடித்ததால் அதில் ஒரு போட்டி ஒத்திவைக்கப்பட்டது. இந்திய அணியில் அந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்து இந்திய சுற்றுப்பயணத்தின் போது குறிப்பிடத்தக்க ரன்களை எடுத்த சில பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர்.
ஸ்விங் கண்டிஷனில் சிறப்பாக செயல்பட்டால்…
"டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட்டில் ஒரு தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்து சூழ்நிலையில் பேட்டிங் செய்யும் சவாலை அவர் ஏற்கனவே தனது செய்து வெற்றியும் கண்டுள்ளார். இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக, அப்படி ஒரு பயங்கரமான தொடரை நாம் பார்த்தோம். ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு கேப்டனாக சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே அவரது குறிக்கோள். ஆனால் அவருடைய பேட்டிங்தான் இம்முறை இந்திய அணியை முன்னேற்றப் போகிறது. அவரிடம் அந்தத் திறமைகள் உள்ளன, ஸ்விங்கிங் சூழ்நிலையில் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் காட்டிய அதே வகையான திறமையை நியூ பாலில் அவர் காட்டுவதை பார்க்க முடிந்தால், அவர் அணிக்கு ஒரு சிறந்த அடித்தளத்தை கண்டிப்பாக அமைத்து தருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." என பாங்கர் கூறினார்.