மேலும் அறிய

அந்த வீரர் மீண்டும் வந்தால் உங்களுக்கு பிரச்சனை… ஷ்ரேயாஸ், ராகுலுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை!

கவாஸ்கர், கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளை பாதிக்கக்கூடிய ஒரு நட்சத்திர வீரர் மீண்டும் வரலாம் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கவனம் இப்போது அடுத்த ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பைக்கு மாறியுள்ள நிலையில், யார்யார் எங்கு விளையாட வேண்டும், ஒவ்வொரு நிலைக்கும் யார் பேக்-அப் விருப்பங்கள் என்பது பற்றிய விவாதங்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. ரோஹித் ஷர்மா தலைமையிலான அணி எல்லா இடத்திற்கும் சரியான வீரரை தேர்வு செய்யும் ஆடிஷனைத் தொடங்கியுள்ளது. ஐசிசி கோப்பைகள் இல்லாத குறையை அடுத்த ஆண்டு உள்நாட்டில் முறியடிக்கும் வேட்கையில் உள்ளது. இந்த விவாதங்களுக்கு மத்தியில், முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர், கே.எல் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்புகளை பாதிக்கக்கூடிய ஒரு நட்சத்திர வீரர் மீண்டும் வரலாம் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

அந்த வீரர் மீண்டும் வந்தால் உங்களுக்கு பிரச்சனை… ஷ்ரேயாஸ், ராகுலுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை!

ஷ்ரேயாஸ் முன்னிலை

இந்தியாவின் மிடில்-ஆர்டரில் கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், மற்றும் சூர்யகுமார் யாதவ் என இன்னும் பலர் அணியில் இடம் பெறுவதற்கான ஆடிஷன்களில் உள்ளனர். ஆனால் இதில் ஷ்ரேயாஸ் ஐயர் 2022 ஆம் ஆண்டில் ஒருநாள் போட்டிகளில் ஒரு கணிசமான ரன்களை குவித்து முன்னணியில் உள்ளார். இவ்வருடம் அவர் 15 போட்டிகளில் 58.09 சராசரியில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதங்களுடன் 639 ரன்கள் எடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்: அடிக்கடி செல்போனில் பேசிய மனைவி... ஆத்திரத்தில் தாலியால் கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவன் - நடந்தது என்ன?

போட்டி நல்லதுதான்

மறுபுறம், ராகுல் இந்த ஆண்டு வெறும் எட்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார், ஞாயிற்றுக்கிழமை பங்களாதேஷுக்கு எதிரான தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கியது உட்பட, அவர் 32.71 சராசரியில் இரண்டு அரைசதங்களுடன் 229 ரன்கள் எடுத்துள்ளார். மிடில் ஆர்டரில் நிலவும் போட்டி குறித்து சோனி ஸ்போர்ட்ஸிடம் பேசிய கவாஸ்கர், ராகுல் மற்றும் ஐயர் இடையேயான போட்டி இருவருக்குமே பயனளிக்கும் என்று கூறினார். “இருவரில் ஒருவர்தான் உள்ளே செல்வார்கள் என்ற நிலை எழுந்தால் இருவருமே வரவிருக்கும் போட்டிகளில் நல்ல ரன்களை குவிக்க நினைப்பார்கள். அது இருவருக்குமே நல்ல விஷயம்தான்", என்றார்.

அந்த வீரர் மீண்டும் வந்தால் உங்களுக்கு பிரச்சனை… ஷ்ரேயாஸ், ராகுலுக்கு கவாஸ்கர் எச்சரிக்கை!

குறுக்க இந்த ஹர்திக் வந்தா!

மேலும் அவர்கள் இருவரும் சிறந்த பீல்டர்கள் மற்றும் கே.எல்.ராகுலால் ஃபீல்டிங் மூலம் (கீப்பிங் அல்ல) விக்கெட்டுகளை எடுக்க முடியும், இது மிகப்பெரிய பிளஸ் ஆகும். எனவே, 5 மற்றும் 6-வது இடங்களுக்கு இதுபோன்ற போட்டிகள் நடைபெறுவது நல்லதுதான். ஆனால், ஹர்திக் பாண்டியா விரைவில் ஒரு நாள் அணிக்கு திரும்ப வாய்ப்புள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள்,” என்று அவர் கூறினார். ஹர்திக் இந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடினார், இரண்டு இன்னிங்ஸ்களில் விளையாடிய அவர், அரை சதத்துடன் 100 ரன்கள் எடுத்தார். அவர் மூன்று இன்னிங்ஸ் முழுவதும் 17 ஓவர்கள் பந்துவீசி ஆறு விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இந்திய அணியின் தவிர்க்கமுடியாத டானாக உருவாகியுள்ள அவர் ஓய்வு முடிந்து திரும்பினால் அது இந்த இருவரில் ஒருவரை வெளியில் அமரவைக்க வேண்டிய நிலையை உருவாக்கும் என்கிறார் கவாஸ்கர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Embed widget