Watch Video Brett Lee | சொந்த மகனையே க்ளீன் போல்டாக்கிய கிரிக்கெட் ஜாம்பவான் ப்ரட்லீ...! வைரல் வீடியோ உள்ளே..
ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ப்ரெட் லீ தனது மகனை போல்டாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பந்துவீச்சாளர்களில் ஒருவர் ப்ரட்லீ. சச்சின் டெண்டுல்கர், லாரா உள்ளிட்ட லெஜண்ட் பேட்ஸ்மேன்களுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கியவர். கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் வர்ணணையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில், ப்ரட் லீயின் சகோதரரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டருமான ஷான் லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ப்ரட்லீயும் அவரது மகனும் அவர்களது வீட்டின் முன்பு கிரிக்கெட் விளையாடுகின்றனர். அவரது 15 வயதே ஆன மகன் ப்ரஸ்டன் பேட்டிங் செய்கிறார். அவருக்கு பந்துவீசும் ப்ரட்லீ தனது துல்லியமான யார்க்கரால் தனது மகனின் மிடில் ஸ்டம்பை பறக்க விடுகிறார்.
மகனை ஆட்டமிழக்கச் செய்த மகிழ்ச்சியில் ப்ரட்லீ தனது கையை உயர்த்தி மகிழ்ச்சியில் முன்னோக்கி வருகிறார். அவது மகன் ப்ரஸ்டனும் சிரித்துக்கொண்டே பேட்டை கீழே போட்டு விட்டு வருகிறார். தற்போது இணையதளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. சிலர் ப்ரட்லீயை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Blink and you'll miss it 😳 Brett Lee has shown no mercy to his son 😂
— Fox Cricket (@FoxCricket) December 30, 2021
👉 https://t.co/PytmEwGeQa pic.twitter.com/bWcQQ9WAnw
1995-ஆம் ஆண்டு முதல் 2010-ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி யாராலும் வீழ்த்த முடியாத அணியாக வலம் வந்தது. ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியின் தவிர்க்க முடியாத வேகப்பந்து வீச்சாளராக வலம் வந்தவர் ப்ரெட் லீ. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் ப்ரெட் லீயின் பந்தில் பேட் செய்யவே பல பேட்ஸ்மேன்களும் அச்சப்படுவார்கள்.
1999-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான ப்ரட்லீ 76 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 310 விக்கெட்டுகளையும், 221 ஒருநாள் போட்டிகளில் ஆடி 380 விக்கெட்டுகளையும், 25 டி20 போட்டிகளில் ஆடி 28 விக்கெட்டுகளையும், 38 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்