Angelo Mathews: இலங்கை அணியின் தொடர் தோல்வி... பத்திரனாவுக்குப் பதிலாக களமிறங்கும் மேத்யூஸ்!
2023 உலகக் கோப்பைக்கான இலங்கை அணியில் மதீஷா பத்திரனாவுக்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
தொடர் தோல்வி:
நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் மோசமாக விளையாடி வருகிறது இலங்கை அணி. முன்னதாக, இந்த அணி கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி நடைபெற்ற 4-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியிடம் 102 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
அதேபோல், கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணியிடன் தோல்வி அடைந்த இலங்கை அணி, கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.
அதேநேரம் புள்ளிப்பட்டியலிலும் 9 வது இடத்தில் தான் இலங்கை அணி இருக்கிறது. மேலும், இனி வரும் 5 போடிகளிலும் வெற்றி பெற்றால் மட்டும் தான் அந்த அணியால் காலிறுதி சுற்றுக்கே தகுதி பெற முடியும்.
மதீஷா பத்திரனாவுக்குப் பதிலாக ஏஞ்சலோ மேத்யூஸ் :
கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியின் போது மதீஷா பத்திரனாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
இதனால், அவர் போட்டியில் இருந்து விலகி நாடு திரும்பினார். மேலும், அவருக்கு எப்போது காயம் சரியாகும் என்பதும் தெரியவில்லை.
இந்நிலையில், தான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிய மதீஷா பத்திரனாவுக்குப் பதிலாக அந்த அணியின் மற்றொரு வீரரனான ஏஞ்சலோ மேத்யூஸ் வரும் போட்டிகளில் களமிறங்க உள்ளார்.
அதேபோல், வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீராவும் அணியில் இணைகிறார்.
இலங்கை அணிக்காக இதுவரை 221 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி உள்ள மேத்யூஸ், 41.01 என்ற சராசரியுடன் மொத்தம் 5865 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 120 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
36 வயதான மேத்யூஸ் மிடில் ஆர்டரில் அந்த அணிக்காக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்து சில ஆண்டுகளாக பல முறை அணியினில் இருந்து நீக்கப்பட்டு மீண்டும் இலங்கை அணியில் இணைந்துள்ளார். முன்னதாக 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக 128 பந்துகளில் 113 ரன்கள் எடுத்தார்.
அதேபோல், இலங்கை அணிக்காக இணைந்துள்ள வேகப்பந்து வீச்சாளர் சமீரா 44 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Pak vs Afg: அன்பு வேணுமா இருக்கு, வெற்றி வேணுமா இருக்கு: இரு அணிகளையும் கொண்டாடிய சென்னை ரசிகர்கள்!
மேலும் படிக்க: SA vs BAN Score LIVE: எடுபடதா வங்காளத்தின் பந்து வீச்சு; சிறப்பாக எதிர் கொண்டு சதத்தை நெருங்கும் டி காக்