Pak vs Afg: அன்பு வேணுமா இருக்கு, வெற்றி வேணுமா இருக்கு: இரு அணிகளையும் கொண்டாடிய சென்னை ரசிகர்கள்!
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளின் போட்டியின் போது இரு அணிகளுக்கும் அன்பை பொழிந்த சென்னை ரசிகர்கள்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று (அக்டோபர் 23) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டி கிரிக்கெட் உலகில் மிக முக்கியமானதாக பார்க்கப்பட்டது. அதற்கான காரணம் என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
ஜெய் ஸ்ரீ ராம் முழக்கம்:
கடந்த அக்டோபர் 14 ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில், இந்திய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் போது பகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்தார். பின்னர் இந்திய பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பந்தில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அப்போது அங்கு கூடியிருந்த இந்திய ரசிகர்கள் பாபர் அசாமை பார்த்து. “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்டனர்.
ரசிகர்களின் இந்த செயல் சமூக வலைதளங்களில் கடும் விவாதப் பொருளாக மாறியது. அதேபோல், பிசிபி (pakistan cricket board) யும் ஐசிசியிடன் இந்திய ரசிகர்களின் இந்த செயல் குறித்து புகார் ஒன்றையும் அளித்தது.
பாகிஸ்தான் - ஆப்கான் மோதல்:
நேற்றைய போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வை செய்தது.
அதன்படி, அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அப்துல்லா ஷபீக் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் களமிறங்கினர். அதன்படி இருவரும் தங்களது பங்களிப்பை தங்கள் அணிக்காக சிறப்பாக வெளிபடுத்தினர்.
அதில், அப்துல்லா ஷபீக் 75 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 58 ரன்கள் எடுத்தனர். அதேபோல், இமாம்-உல்-ஹக் 22 பந்துகளில் 2 பவுண்டரிகள் உட்பட 17 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பாபரை கொண்டாடிய சென்னை ரசிகர்கள்:
இந்நிலையில், நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை ரசிகர்கள் பலர் பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு தெரிவித்தினர்.
அதன்படி, பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்த போது மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதேபோல், பாகிஸ்தான் அணி எடுக்கும் ஒவ்வொரு ரன்னுக்கும் அந்த அணியை சென்னை ரசிகர்கள் உற்சாகப்படுத்தினர்.
பாபர் அசாமின் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள்:
பாபர் அசாமின் ஜெர்ஸி அணிந்த ரசிகர்கள் தான் மைதனாத்தில் அதிகம் காணப்பட்டனர். அதேபோல், பாகிஸ்தான் ரசிகர்கள் சிலர் சென்னையில் எங்கள் அணிக்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை.
ஆனால் சென்னை ரசிகர்கள் எங்களுக்கு அன்பை அள்ளிக்கொடுத்துள்ளனர் என்று கூறியதையும் காணமுடிந்தது.
ஆப்கானிஸ்தான் அணிக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் சென்னை ரசிகர்கள் யாருக்கு எதிராகவும் வெறுப்பை காட்டவில்லை என்றும் கூறினர்.
அதேநேரம் இந்த போட்டியில் கடந்த 1999 ஆம் ஆண்டிற்கு பிறகு ஆப்கானிஸ்தான் அணி வெற்றிவாகை சூடியதை ரசிகர்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்டார்கள். இவ்வாறாக இந்த போட்டி அன்பு, வெற்றி, உற்சாகம் என நிறைந்திருந்ததை கிரிக்கெட் உலகம் என்றும் மறக்காது என்பதே கிரிக்கெட் விமர்சகர்களின் கருத்தாக இருக்கிறது.
மேலும் படிக்க: World Cup 2023: இக்கட்டான நிலையில் பாகிஸ்தான், இங்கிலாந்து.. எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு செல்லும்..? ஒரு பார்வை..!
மேலும் படிக்க: SA vs BAN Score LIVE: எடுபடதா வங்காளத்தின் பந்து வீச்சு; சிறப்பாக எதிர் கொண்டு சதத்தை நெருங்கும் டி காக்