SA vs BAN Score LIVE: ஒன்மேன் ஆர்மியாக போராடிய மஹமுதுல்லா அறுதல் சதம்; 149 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா இமாலய வெற்றி
SA vs BAN Score LIVE: தென்னாப்ரிக்கா மற்றும் வங்கதேசம் இடையிலான போட்டி குறித்த உடனடி அப்டேட்களை தெரிந்துகொள்ள ஏபிபி பக்கத்தில் இணைந்திருங்கள்.
LIVE
Background
SA vs BAN Score LIVE: உலகக் கோப்பைத் தொடர் விறுவிறுப்பாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 23வது போட்டியில் இன்று தென்னாப்பிரிக்கா – வங்கதேசம் அணிகள் நேருக்கு நேர் மோத உள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற மும்பை வான்கடே மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ளது.
வங்கதேசம் - தென்னாப்பிரிக்கா:
வங்கதேச அணியை காட்டிலும் தென்னாப்பிரிக்க அணி பலமிகுந்த அணியாக கருதப்படுகிறது. நெதர்லாந்து அணியுடனான போட்டியில் தோல்வியடைந்தாலும், கடந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 399 ரன்களை விளாசி தங்களது பேட்டிங் பலத்தை மீண்டும் நிரூபித்தனர்.
தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் தெம்பா பவுமா காயம் காரணமாக இன்றைய போட்டியில் ஆடமாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மார்க்ரம் தலைமையிலான தென்னாப்பிரிக்க அணியில் டி காக், ஹென்ட்ரிக்ஸ், டுசென், கிளாசென், மில்லர், ஜான்சென் ஆகியோர் பேட்ஸ்மேன்களாக உள்ளனர். தென்னாப்பிரிக்காவின் பேட்டிங் பலமாக இருப்பதற்கு இவர்களே மிகவும் முக்கிய காரணமாக உள்ளனர்.
பேட்டிங், பவுலிங்:
டி காக் – ஹென்ட்ரிக்ஸ் சிறப்பான தொடக்கம் தந்தால் இறுதி கட்டத்தில் கிளாசென் – ஜான்சென் ஜோடி ஆட்டத்தையே மாற்றிவிடுவார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். மிடில் ஆர்டரில் மார்க்ரம், டு சென் சிறப்பாக ஆடினால் தென்னாப்பிரிக்காவுக்கு இன்னும் பலமாகும்.
வங்கதேச அணியில் முஸ்தபிஷூர் ரஹ்மான், இஸ்லாம், முகமது, தன்ஷிம், டஸ்கின் அகமது பந்துவீச்சில் பலமாக வீச வேண்டியது அவசியம் ஆகும். வங்கதேச அணியின் மிகப்பெரிய நம்பிக்கையாக இருப்பது அந்த அணியின் கேப்டனும், ஆல்ரவுண்டருமான ஷகிப் அல் ஹசனே ஆவார். அவர் இன்றைய போட்டியில் ஆடுவாரா? என்பது கேள்விக்குறி. அவருக்கு காயம் ஏற்பட்டுள்தால் உடல்தகுதியிருந்தால் மட்டுமே பங்கேற்பார்.
வெல்லப்போவது யார்?
தென்னாப்பிரிக்க அணியின் பந்துவீச்சின் பலமாக ரபாடா, கோட்ஸி, ஜான்சென், மகாராஜ் உள்ளனர். இவர்களது பந்துவீச்சை சமாளித்து வங்கதேச அணியின் ஷான்டோ, ரஹீம், தன்ஷித் ஹாசன், லிட்டன் தாஸ், மெஹிதி ஹாசன், தௌகித் சிறப்பாக ஆட வேண்டியது அவசியம் ஆகும். இரு அணிகளும் இதுவரை 24 ஒருநாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் 18 ஒருநாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியும், 6 ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்றுள்ளன.
புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளில் ஆடி 3 வெற்றி 1 தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி 4 போட்டியில் ஆடி 1 வெற்றி 3 தோல்விகளுடன் 7வது இடத்தில் உள்ளது. வங்கதேச அணி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும். தென்னாப்பிரிக்க அணி தங்களது அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த வெற்றி பெற்றாக வேண்டியது அவசியம் ஆகும்.
மேலும் படிக்க: Bishan Singh Bedi: பிஷன்சிங் பேடி அப்பவே அப்படி! பாகிஸ்தானுக்கு எதிராக செய்த சம்பவம் - மறக்க முடியுமா?
மேலும் படிக்க: AFG Vs PAK, Match Highlights: மட்டமான ஃபீல்டிங்; சுமாரான பவுலிங்; ஆஃப்கானிஸ்தானுக்கு வெற்றியை தூக்கி கொடுத்த பாகிஸ்தான்
SA vs BAN Score LIVE: மேன் ஆஃப் த மேட்ச் யாருக்கு..!
தொடக்க வீரராக களமிறங்கி 140 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் விளாசி 174 ரன்கள் குவித்த டி காக்கிற்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
SA vs BAN Score LIVE: வங்கதேச தரப்பிலான சிக்ஸர்கள் விபரம்..!
இந்த போட்டியில் வங்கதேச தரப்பில் மொத்தம் 5 சிக்ஸர்கள் மட்டுமே அடிக்கப்பட்டது. அதில் 4 சிக்ஸர்கள் மஹமுதுல்லா பறக்கவிட்டார்.
SA vs BAN Score LIVE: வங்காள தேசத்தின் பவுண்டரிகள் விபரம்..!
வங்கதேச அணி தரப்பில் மொத்தம் 25 பவுண்டரிகள் விரட்டப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக மஹமுதுல்லா மட்டும் 11 பவுண்டரிகள் விரட்டியுள்ளார்.
SA vs BAN Score LIVE: தென்னாப்பிரிக்காவின் சிக்ஸர்கள் விபரம்..!
இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா தரப்பில் மொத்தம் 19 சிக்ஸர்கள் பறக்கவிடப்பட்டுள்ளது. இதில் கென்ரிச் கிளாசன் 8 சிக்ஸர்கள் விரட்டி மிரட்டியுள்ளார்.
SA vs BAN Score LIVE: இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவின் பவுண்டரிகள் விபரம்..!
தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் மொத்தம் 26 பவுண்டரிகள் விளாசியுள்ளது. அதிகபட்சமாக டி காக் 15 பவுண்டரிகள் விளாசியுள்ளார்.