மேலும் அறிய
Advertisement
Cricket : மும்பை வாழ் தமிழர்களுக்கிடையே நடந்த சிவந்தி ப்ரீமியர் லீக் !
தமிழர்கள் மரபு படி கிரிக்கெட் ஸ்டெம்ப் அருகே தேங்காய் உடைத்து ஊதுபத்தி காண்பித்து ஸ்டெம்மிற்கு மாலை அணிவித்து வணங்கிய பிறகு வீரர்களிடம் டாஸ் போட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
மும்பையில் தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பாக முலூண்ட் பகுதியில் உள்ள ராஜே சம்பாஜீ மைதான் பகுதியில் மும்பையில் வாழும் தமிழர்களை ஒருங்கிணைத்து முதல்முறையாக சிவந்தி ப்ரீமியர் லீக் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் ஐ.பி.எல்.ஐ போன்று மகாராஷ்டிரா மாநில மும்பை பகுதியில் வசிக்கக்கூடிய தமிழர்களை ஒருங்கிணைத்து சிவந்தி பிரீமியர் லீக்- எஸ்.பி.எல்., ( SPL ) - என இந்த கிரிக்கெட் போட்டியானது ஆறு அணிகளைக் கொண்டு நடைபெற்றது.
இந்த கிரிக்கெட் போட்டியை வீரர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து போட்டியை மும்பை மாநகராட்சி மாமன்ற உறுப்பினரும் முன்னாள் நகர் வளர்ச்சித்துறை சேர்மன் பிரகாஸ் கங்காதரே அவர்கள் தமிழர்கள் மரபு படி கிரிக்கெட் ஸ்டெம் அருகே தேங்காய் உடைத்து ஊதுபத்தி காண்பித்து ஸ்டெம்மிற்கு மாலை அணிவித்து வணங்கிய பிறகு வீரர்களிடம் டாஸ் போட்டு போட்டியை துவக்கி வைத்தார்.
ஒரு அணிக்கு ஐந்து ஓவர் வீதம் காலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி மாலை ஐந்து மணி வரை நடை பெற்றது. (Sion Sixers ,bhandup dragon, Thane warriors, navi mumbai challengers, mound stars, western tigers என்ற பெயர்களைக் கொண்ட ஆறு அணிகள் களம் கண்டன. முதல் பரிசு வென்றவர்களுக்கு வெற்றிக்கோப்பை உடன் 51 ஆயிரம் ரூபாய் காசோலை பரிசாக வழங்கப்பட்டது. இரண்டாம் பரிசு வென்றவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் காண காசோலை வழங்கப்பட்டது. இத்துடன் முதல் பரிசு இரண்டாம் பரிசு மற்றும் மூன்றாம் பரிசு வென்ற வீரர்களுக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உருவம் பொறிக்கப்பட்ட வெள்ளி காசு வழங்கப்பட்டது. மும்பை வாழ் தமிழர்களை ஒருங்கிணைத்து முதல்முறையாக சீசன் 1 என்கின்ற இந்த கிரிக்கெட் போட்டியானது வரும் காலங்களில் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்தப் போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாட்டில் இருந்து தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தின் - மாநில பொதுச் செயலாளர் ஜெகதீஷ் சவுந்தர் முருகன் மற்றும் மதுரை இலக்கிய மன்ற நிறுவனரும் பட்டிமன்ற நடுவரும் , தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவையின் இலக்கிய அணி தலைவருமான மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அவனி மாடசாமி, ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற வீரர்களுக்கு நினைவு பரிசுகளை வழங்கினார். தமிழ்நாடு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த தலைவர்- ரஷல் நாடார், செயலாளர்- K.ராஜ்குமார் நாடார் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த மாபெரும் கிரிக்கெட் போட்டியை நடத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விழுப்புரம்
தமிழ்நாடு
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion