CWG 2022 Wrestling: காமன்வெல்த் மல்யுத்தத்தில் இந்தியாவிற்கு 8-வது பதக்கத்தை உறுதி செய்த ரவிக்குமார் தஹியா
காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் ரவிக்குமார் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.
காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் ஆடவருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தஹியா பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளில் சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அரையிறுதிப் போட்டியில் இவர் பாகிஸ்தான் வீரர் அசாத் அலியை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் ரவிக்குமார் தஹியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இந்தப் போட்டியில் முதல் சுற்றில் முடிவில் இரு வீரர்களும் தலா 2 புள்ளிகளை பெற்று இருந்தனர். இதைத் தொடர்ந்து இரண்டாவது சுற்றின் தொடக்கத்தில் ரவிக்குமார் தஹியா சிறப்பாக விளையாட தொடங்கினார். அடுத்தடுத்து புள்ளிகளை எடுத்தார். இறுதியில் 14-4 என்ற கணக்கில் ரவிக்குமார் தஹியா பாகிஸ்தான் வீரரை தோற்கடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம் காமன்வெல்த் 2022 மல்யுத்ததில் இந்தியாவிற்கு 8வது பதக்கத்தை ரவிக்குமார் தஹியா உறுதி செய்தார்.
#Wrestling Update 🚨
— SAI Media (@Media_SAI) August 6, 2022
Ravi Dhaiya (57kg FS) enters FINALS 🤩
He defeated Ali Asad of Pakistan by Technical Superiority (14-4) in the Semis to play for the GOLD🥇
All the best Champ 👍#Cheer4India#India4CWG2022 pic.twitter.com/HUdu0tZQ6e
இதைத் தொடர்ந்து மகளிருக்கான 50 கிலோ எடைப்பிரிவு போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியா சார்பில் பூஜா கேலோத் பங்கேற்றார். இவர் முதல் இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து அரையிறுதி போட்டிக்கு இவர் முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் இவர் கனடாவின் மேடிசன் பார்க்ஸை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் இந்தியாவின் பூஜா கேலோத் 9-6 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் அவர் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பங்கேற்க உள்ளார்.
முன்னதாக நேற்று நடைபெற்ற மல்யுத்த போட்டிகளில் இந்தியாவின் பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக் மற்றும் தீபக் புனியா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று இருந்தனர். அன்ஷூ மாலிக் வெள்ளிப் பதக்கம் வென்று இருந்தார். அத்துடன் திவ்யா காக்கரன் மற்றும் மோஹித் ஆகிய இருவரும் வெண்கலம் வென்று இருந்தனர். நேற்று ஒரே நாளில் இந்திய அணி 3 தங்கம், 1 வெள்ளி மற்றும் 2 வெண்கலம் என மொத்தமாக 6 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்