CWG 2022: காமன்வெல்த் மல்யுத்தத்தில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்திய பஜ்ரங் மற்றும் தீபக் புனியா
காமன்வெல்த் மல்யுத்ததில் பஜ்ரங் மற்றும் தீபக் புனியா ஆகிய இருவரும் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
காமன்வெல்த் போட்டிகளில் இன்று மல்யுத்த போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியா சார்பில் இன்று ஆடவர் பிரிவில் பஜ்ரங் புனியா(65 கிலோ), தீபக் புனியா(86 கிலோ), மோஹித்(125 கிலோ) ஆகியோர் களமிறங்க உள்ளனர். மகளிர் பிரிவில் சாக்ஷி மாலிக்(62 கிலோ), திவ்யா காக்கரன்(68 கிலோ), அன்ஷூ மாலிக் (57கிலோ) ஆகியோர் களமிறங்கனர். இதில் பஜ்ரங் புனியா மற்றும் தீபக் புனியா ஆகிய இருவரும் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தனர்.
இந்நிலையில் பஜ்ரங் புனியா காலிறுதிச் சுற்றில் மோரிசியஸ் நாட்டின் ஜீன் குலியானை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் பஜரங் புனியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன்காரணமாக இந்தப் போட்டியை 6-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் அவர் 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். நடப்புச் சாம்பியனான புனியா இன்னும் ஒரு வெற்றி பெறும் பட்சத்தில் பதக்கத்தை உறுதி செய்துவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
Wrestling: Bajrang Punia storms into Semis (FS 65kg) after pinning down his opponent in 2nd round.
— India_AllSports (@India_AllSports) August 5, 2022
2 bouts | 2 pins ✨ #CWG2022 #CWG2022India pic.twitter.com/TQdA7toeM7
இதைத் தொடர்ந்து ஆடவருக்கான 86 கிலோ எடைப்பிரிவில் காலிறுதிச் சுற்று நடைபெற்றது. அதில் இந்தியா சார்பில் தீபக் புனியா சியரா லியோன் நாட்டைச் சேர்ந்த சேகு கெச்கபாமாவை எதிர்த்து விளையாடினார். அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய தீபக் புனியா 10-0 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் அவரும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
முன்னதாக மகளிருக்கான 62 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சாக்ஷி மாலிக் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். அதேபோல் மகளிருக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அன்ஷூ மாலிக் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியிருந்தார். இவர்களை தொடர்ந்து ஆடவருக்கான 125 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மோஹித் அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார். இவர்கள் அனைவரும் வெல்லும் பட்சத்தில் இந்தியாவிற்கு அதிகமான பதக்கங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்