Commonwealth Games 2022: ஜூடோவில் கலக்கிய இந்திய வீராங்கனை சுஷீலா தேவிக்கு மெடல் கன்ஃபார்ம்.. அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்..
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலாதேவி ஜூடோ போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இன்று ஜூடோ போட்டியில் மகளிர் பிரிவில் 20வது ஆட்டம் நடைபெற்றது. காலிறுதி ஆட்டமான இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான சுஷீலா தேவி லிக்மபாம் மலாய் நாட்டைச் சேர்ந்த ஹாரியட் போன்பேசுடன் மோதினர்.
#Judo 🥋 Update
— SAI Media (@Media_SAI) August 1, 2022
India's Jasleen Singh (-66kg) goes down in his Semi-Final bout
To play for Bronze next
Watch this space for updates!#Cheer4India pic.twitter.com/rp0n0S366O
இந்த போட்டியில் இந்திய வீராங்கனையான சுஷிலாதேவி தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தினர். அவருடைய பிடிக்கு எதிர் வீராங்கனையான ஹாரியட்டால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால், இந்த போட்டியில் இந்திய வீராங்கனை சுஷிலாதேவி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.
Just in: Judoka Jasleen Singh Saini loses his Semis bout (66 kg) to Finlay Allan.
— India_AllSports (@India_AllSports) August 1, 2022
However all is not lost for him as there is Repechage in Judo. He will fight for Bronze medal later tonight. #CWG2022 #CWG2022India pic.twitter.com/DMCPo6EfFc
இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற தகுதிச்சுற்று போட்டியில் 60 கிலோ பிரிவில் இந்தியாவின் விஜயகுமார் யாதவ், மொரிஷியசின் வின்ஸ்லி கங்கயாவை வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
#Judo 🥋 Update
— SAI Media (@Media_SAI) August 1, 2022
India's Jasleen Singh (-66kg) goes down in his Semi-Final bout
To play for Bronze next
Watch this space for updates!#Cheer4India pic.twitter.com/rp0n0S366O
அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய சுஷிலாதேவிக்கு ரசிகர்களும், வீரர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்