CWG 2022 Para Table Tennis: காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் வெற்றியுடன் தொடங்கிய பவினா,சோனல்பென்
காமன்வெல்த் பாரா டேபிள் டென்னிஸ் போட்டியை இந்தியாவின் பவினா மற்றும் சோனல்பென் வெற்றியுடன் தொடக்கியுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் குழு பிரிவில் இந்திய ஆடவர் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது. இறுதிப் போட்டியில் இந்திய அணி சிங்கப்பூர் அணியை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது. இந்நிலையில் இன்று முதல் பாரா டேபிள் டென்னிஸ் போட்டிகள் தொடங்கின.
இதில் மகளிருக்கான கிளாஸ் 3-5 பிரிவில் இந்தியாவின் பவினா பட்டேல் மற்றும் சோனல்பென் பட்டேல் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். முதல் சுற்றுப் போட்டியில் பவினா பட்டேல் டேனியலாவை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை பவினா 8-11 என இழந்தார். அதன்பின்னர் அடுத்த மூன்று கேம்களையும் 11-4,11-7,11-9 என்ற கணக்கில் வென்றார்.
#ParaTableTennis Update 🚨
— SAI Media (@Media_SAI) August 3, 2022
Bhavina defeated Daniela Toro (AUS) 3-1 (8-11, 11-4, 11-7, 11-9) in the group stage of Women's Singles (Class 3-5)
அதேபோல் சோனல்பென் பட்டேல் தன்னுடைய முதல் போட்டியில் சு பெய்லியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் முதல் கேமை சோனல்பென் பட்டேல் 11-7 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது கேமையும் 11-5 என வென்றார். மூன்றாவது கேமை சோனல்பென் 6-11 என இழந்தார். நான்காவது கேமை 11-7 என சோனல்பென் வென்றார். அத்துடன் பெய்லியை வீழ்த்தினார். சோனல்பென் மற்றும் பவினா பட்டேல் ஆகிய இருவரும் இன்று இரவு நடைபெறும் இரண்டாவது குரூப் போட்டியில் விளையாட உள்ளனர்.
#ParaTableTennis Update 🚨
— SAI Media (@Media_SAI) August 3, 2022
Sonalben defeated Bailey S.(England) 3-1 (11-7, 11-5, 6-11, 11-7) in the group stage of Women's Singles(Class 3-5)
மகளிருக்கான கிளாஸ் 6-10 பிரிவில் இந்தியாவின் பேபி சஹானா நைஜீரியாவின் ஃபையித்தை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் நைஜீரிய வீராங்கனை ஃபையித் 11-9,11-8,11-6 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம் முதல் குரூப் போட்டியில் பேபி சஹானா தோல்வி அடைந்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்