CWG Medal Tally 2022: அந்நிய நாடுகளை கதிகலங்க வைக்கும் இந்தியா.. பதக்க பட்டியலில் படாரென உயர்ந்து அசத்தல்!
காமன்வெல்த் போட்டியின் 4வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.
Commonwealth Games 2022 Medal Tally: இந்திய ஜூடோகா சுஷிலா தேவி லிக்மாபம், தென்னாப்பிரிக்காவின் மைக்கேலா வைட்பூயிக்கு எதிராக பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
Ham jienge to is bhaarat ke lie aur marenge to is bhaarat ke lie🇮🇳🥇🙏🏻 pic.twitter.com/lUKeF0TWCR
— Jeremy Lalrinnunga (@raltejeremy) August 1, 2022
இவரை தொடர்ந்து ஆடவருக்கான 60 கிலோ ஜூடோ பிரிவில் இந்தியாவின் விஜய் குமார் யாதவ் வெண்கலப்பதக்கமும், பளுதூக்கும் வீராங்கனை ஹர்ஜிந்தர் கவுர், பெண்களுக்கான 71 கிலோ எடைப் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றனர்.
முன்னதாக, காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இரண்டாம் நாள் இந்திய அணிக்கு சிறப்பானதாக அமைந்தது. இரண்டாம் நாளில் பெண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு இறுதிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் மீராபாய் சானு மிகப்பெரிய கவனத்தை ஈர்த்தார். மேலும், ஆண்களுக்கான 55 கிலோ பிரிவில் சங்கேத் சர்கார் வெள்ளியும், ஆடவருக்கான 61 கிலோ எடைப் பிரிவில் குருராஜா பூஜாரி வெண்கலமும் வென்றனர்.
குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா போர்கோஹைன், ஏரைன் நிக்கல்சனுக்கு எதிராக ஏகமனதாக முடிவெடுத்து 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். இந்திய டேபிள் டென்னிஸ் மலேசியாவிடம் மோதிய போதிலும், மகளிர் ஹாக்கி அணி வேல்ஸை 3-1 என்ற கணக்கில் வீழ்த்தி வலுவான நிலைக்கு சென்றது. அதேபோல், மகளிர் 55 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 202 கிலோ எடையை தூக்கி பிந்த்யாராணி தேவி வெள்ளி பதக்கம் வென்றார்.
இதன் மூலம் காமன்வெல்த் விளையாட்டு 2022 தொடரில் இந்திய அணி 9 பதக்கங்களை பெற்றுள்ளது. இந்த நிலையில், காமன்வெல்த் போட்டியின் 4வது நாள் முடிவில் பதக்க பட்டியலில் முதலிடத்தில் எந்த நாடு உள்ளது..? இந்தியாவிற்கு எத்தனையாவது இடம் ? என்பதை கீழே காணலாம்.
ரேங் | நாடுகள் | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | ஆஸ்திரேலியா | 31 | 20 | 20 | 71 |
2 | இங்கிலாந்து | 21 | 22 | 11 | 54 |
3 | நியூசிலாந்து | 13 | 7 | 4 | 24 |
4 | கனடா | 6 | 11 | 16 | 33 |
5 | தென்னாப்பிரிக்கா | 5 | 3 | 4 | 12 |
6 | இந்தியா | 3 | 3 | 3 | 9 |
7 | ஸ்காட்லாந்து | 2 | 8 | 13 | 23 |
8 | மலேசியா | 2 | 2 | 2 | 6 |
9 | நைஜீரியா | 2 | 0 | 2 | 4 |
10 | வெல்ஸ் | 1 | 2 | 7 | 10 |
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்