CWG 2022 Weightlifting: காமன்வெல்த் போட்டியில் 2வது பதக்கம்.. பளுதூக்குதலில் குருராஜா வெண்கலம் வென்று அசத்தல்
காமன்வெல்த் பளுதூக்குதல் போட்டியில் 61 கிலோ எடைப்பிரிவில் குருராஜா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பதக்கம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படும் பிரிவில் பளுதூக்குதலும் ஒன்று. இந்நிலையில் இன்று ஆடவருக்கான 61 கிலோ எடைப்பிரிவு போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் குருராஜா பங்கேற்றார். ஸ்நாட்ச் பிரிவில் இவர் முதல் வாய்ப்பில் 115 கிலோ எடையை தூக்கினார். அதன்பின்னர் தன்னுடைய இரண்டாவது வாய்ப்பில் இவர் 118 கிலோ எடையை தூக்கினார்.
அடுத்து மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 120 கிலோ எடையை தூக்க முற்பட்டார். எனினு அவரால் சரியாக தூக்க முடியவில்லை. அதிகபட்சமாக ஸ்நாட்ச் பிரிவில் இவர் 118 கிலோ எடையை தூக்கினார். இதன்பின்னர் கிளின் அண்ட் ஜெர்க் பிரிவு நடைபெற்றது. அதில் குருராஜா தன்னுடைய முதல் வாய்ப்பில் 144 கிலோ எடையை தூக்கினார்.
CWG: Medal Alert 🚨 :
— India_AllSports (@India_AllSports) July 30, 2022
2nd medal for India; Gururaja Poojary wins Bronze medal in Weightlifting (Men's 61kg) after lifting 269 kg ( 118kg in Snatch + 151 kg in C&J).
👉 Gururaj had won Silver medal in last edition (56kg). #CWG2022 pic.twitter.com/HTO8M3Gzi8
இரண்டாவது முயற்சியில் இவர் 148 கிலோ எடையை தூக்கினார். மூன்றாவது மற்றும் கடைசி வாய்ப்பில் இவர் 151 கிலோ எடையை அசத்தலாக தூக்கினார். இதன்மூலம் கிளின் அண்ட் ஜெர்க் முறையில் அதிகபட்சமாக 151 கிலோ எடையை பதிவு செய்தார். மொத்தமாக இரண்டு பிரிவுகளிலும் சேர்த்து மொத்தமாக 269 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தினார்.
இதன்மூலம் பளுதூக்குதலில் இந்தியாவிற்கு ஒரே நாளில் கிடைத்த இரண்டாவது பதக்கமாக இது அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இன்று நடைபெற்ற ஆடவர் 55 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் சன்கித் சர்கார் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியிருந்தார். அவர் தங்கப்பதக்கத்தை ஒரு கிலோ எடை வித்தியாசத்தில் தவறவிட்டார். எனினும் காயம் ஏற்பட்ட பின்பு கூட தன்னுடைய கடைசி முயற்சியை அவர் செய்து பலருடைய மனதில் இடம்பிடித்து அசத்தினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்