CWG2022 Neetu Gangas : குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு தங்கத்தை வென்ற தங்கம்.. இளம் வீராங்கனை நீது கங்காஸ் அபார வெற்றி..!
CWG GOLD : காமன்வெல்த்தில் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் நீது கங்காஸ் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் இந்திய வீரர்கள் போட்டியின் 10வது நாளான இன்று பதக்கங்களை குவித்து வருகின்றனர். குறிப்பாக, குத்துச்சண்டை போட்டியில் இந்தியா இன்று அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இன்று 45 கிலோ முதல் 48 கிலோ வரையிலான எடைப்பிரிவில் இந்தியாவின் நீது கங்காஸ் மற்றும் இங்கிலாந்தின் டேமி ஜேட் ரெஸ்ஜ்டான் நேருக்கு நேர் மோதினர். இந்த போட்டியில் இந்தியாவின் நீது தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். அவரது சரமாரி குத்துக்களுக்கு இங்கிலாந்து வீராங்கனையால் ஈடு கொடுக்க முடியவில்லை. இதனால், போட்டியின் முடிவில் இந்திய வீராங்கனை நீது கங்காஸ் அபார வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார்.
GOLD FOR NITU!🥇
— Boxing Federation (@BFI_official) August 7, 2022
🇮🇳Nitu puts up a 5️⃣ ⭐️ performance against 🏴’s R. Demie -Jade to clinch the Gold medal🥇 at the #Birmigham2022 ! 💪
Score: 5-0
Congratulations, champ!🔥@AjaySingh_SG | @debojo_m@birminghamcg22#Commonwealthgames#B2022#PunchMeinHainDum 2.0#birmingham22 pic.twitter.com/bRHr8aENQ1
5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்ற நீது கங்காஸ் இந்தியாவிற்காக நடப்பு காமன்வெல்த்தில் 14வது தங்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
நடப்பு காமன்வெல்த் போட்டி வரலாற்றில் இந்தியா குத்துச்சண்டையில் பெற்ற முதல் தங்கம் இதுவாகும். இந்தியாவின் இளம் வீராங்கனையான நீது கங்காஸ் காமன்வெல்த்தில் பங்கேற்பது இதுவே முதன்முறை ஆகும். இவர் காலிறுதிப் போட்டியில் வடக்கு அயர்லாந்து வீராங்கனையான நிகோல் கிளாய்டை வீழ்த்தினார். இந்தியா பளுதூக்குதலில், ஜூடோ, டேபிள் டென்னிசில் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வரும் நிலையில் குத்துச்சண்டையில் பதக்கம் பெறவில்லை என்ற குறையை நீது கங்காஸ் தீர்த்து வைத்தார்.
மேலும் படிக்க : CWG 2022 : காமன்வெல்த் மகளிர் ஹாக்கி : 16 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம்.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்..
மேலும் படிக்க : Amit Panghal : பதக்கங்களில் தங்க மழை பொழியும் இந்தியா.. குத்துச்சண்டையில் தங்கம் வென்று அசத்திய அமித் பங்கால்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்