Amit Panghal : பதக்கங்களில் தங்க மழை பொழியும் இந்தியா.. குத்துச்சண்டையில் தங்கம் வென்று அசத்திய அமித் பங்கால்..
CWG 2022 : காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் அமித்பங்கால் தங்கம் வென்று அசத்தியுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டித் தொடரில் இந்திய வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியா இன்று குத்துச்சண்டையில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது.
நடப்பு காமன்வெல்த் போட்டித் தொடரில் இந்தியாவிற்காக நீது கங்காஸ் முதல் பதக்கத்தை வென்றுத்தந்த நிலையில், 48 கிலோ – 51 கிலோ எடைப்பிரிவிலான போட்டியில் இந்தியாவின் அமித் பங்காலும், இங்கிலாந்தின் கியாரன் மெக்டொனால்டும் தங்கத்தை வெல்வதற்கான மோதலில் ஈடுபட்டனர்.
2️⃣nd GOLD🥇FOR 🇮🇳@Boxerpanghal better his 2018 CWG medal after showing his lethal game against 🏴’s K. Macdonald to claim the 🥇!
— Boxing Federation (@BFI_official) August 7, 2022
Score: 5-0
Congratulations, champ! 👏👏@AjaySingh_SG | @debojo_m @birminghamcg22#Commonwealthgames#B2022#PunchMeinHainDum 2.0#birmingham22 pic.twitter.com/ylXHKdiFKP
இந்த போட்டியில் இந்தியாவின் அமித்பங்கால் போட்டித் தொடங்கியது முதல், இங்கிலாந்தின் மெக்டொனால்டிற்கு கடும் நெருக்கடி அளித்தார். அமித்பங்காலின் குத்துக்களுக்கு மெக்டொனால்டால் சமாளிக்க முடியவில்லை. இந்த போட்டியில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தி வந்த அமித்பங்கால் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காமன்வெல்த் போட்டித் தொடரில் குத்துச்சண்டையில் இந்தியாவிற்கான இரண்டாவது தங்கத்தை வென்று அசத்தினார்.
அமித்பங்கால் இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீரர் ஆவார். காமன்வெல்த்தில் கண்டிப்பாக அவர் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அவர் தங்கப்பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இது மட்டுமின்றி இன்று இரவு 7 மணிக்கு 50 கிலோகிராம் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் மற்றும் இங்கிலாந்தின் காரல் மெக் நவுலுடன் மோதுகின்றார். 92 கிலோகிராம் எடைப்பிரிவில் இன்று நள்ளிரவு 1.15 மணிக்கு இந்தியாவின் சாகரும், இங்கிலாந்தின் டெலிசியர் ஓரியும் மோதுகின்றனர். இவர்கள் இருவரும் இறுதிப்போட்டியில் மோதுவதால் இந்தியாவிற்கு தங்கமோ அல்லது வெள்ளியோ கிடைக்கும் என்று உறுதியுடன் நம்பலாம்.
மேலும் படிக்க : PV Sindhu Reaches Final: காமன்வெல்த் இறுதிப்போட்டியில் பி.வி. சிந்து.. தங்கத்துக்கு குறிவைக்கிறாரா இந்திய சிங்கம்?
மேலும் படிக்க : CWG 2022 : காமன்வெல்த் மகளிர் ஹாக்கி : 16 ஆண்டுகளுக்கு பிறகு வெண்கலம்.. நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அசத்தல்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்