(Source: ECI/ABP News/ABP Majha)
Commonwealth Games 2022: வலது காலில் ஏற்பட்ட வலுவான காயம்... காமன்வெல்த் போட்டியில் இருந்து விலகிய மேரி கோம்!
காமன்வெல்த் விளையாட்டு 2022 : குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் காயம் காரணமாக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் இருந்து விலகினார்.
இந்தியாவின் மூத்த குத்துச்சண்டை வீரரும், ஆறு முறை உலக சாம்பியனுமான மேரி கோம் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் இந்த ஆண்டு ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் பர்மிங்காமில் நடைபெற உள்ளன. இதற்கான ஆட்டம் புதுடெல்லி இந்திரா காந்தி சர்வதேச மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. 48 கிலோ எடைப்பிரிவில் ஹரியானா வீராங்கனை நிதுவுக்கு எதிரான முதல் சுற்றில் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
முன்னதாக, காயம் ஏற்பட்ட பிறகும் 39 வயதான மேரி கோம் போட்டியிட தொடர்ந்து முயற்சி செய்தார். ஆனால் ஹரியானா வீராங்கனை நிது தொடர்ச்சியாக மேரிகோமுக்கு இரண்டு குத்துகள் விட, மீண்டும் தடுமாறிய மேரி கோம் இடது காலைப் பிடித்துக்கொண்டு அமர்ந்தார். இறுதியில் மேரி கோம் போட்டியை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதன் பிறகு நீதுவை வெற்றி பெற்றதாக போட்டி நடுவர் அறிவித்தார். கடந்த 2018 காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மேரி கோம் தங்கப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
Six-time World Champion Mary Kom has withdrawn from the ongoing Women’s Boxing Trials for the 2022 Commonwealth Games due to an injury she suffered yesterday, June 9.
— ANI (@ANI) June 10, 2022
(File photo) pic.twitter.com/8G5p6N9fjn
மேரி கோமின் புகழ்பெற்ற குத்துச்சண்டை வாழ்க்கையையில் இதுவரை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஒரு தங்கப் பதக்கம் வென்றுள்ளார். அதேபோல், வீரர் உலக சாம்பியன்ஷிப்பில் ஆறு தங்கம், ஒரு வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் உட்பட 8 பதக்கங்களை வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் மற்றும் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறவுள்ள பர்மிங்காம் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சுமார் 72 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். இங்கிலாந்தில் மூன்றாவது முறையாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. முன்னதாக, 1934 இல் லண்டனில் மற்றும் 2002 இல் மான்செஸ்டரில் விளையாட்டுகள் நடைபெற்றது.
வருகின்ற சனிக்கிழமை 48 கிலோ எடைப்பிரிவில் நடைபெறும் இறுதிப் போட்டியில் மஞ்சு ராணியை நிது எதிர்கொள்கிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்