Ronaldo Joins Man United: தொடங்கிய இடத்திற்கு வந்து சேர்ந்த ரொனால்டோ: 12 ஆண்டுகளுக்குப் பின் ரசிகர்கள் குஷி!
196 முறை மான்செஸ்டர் அணிக்காக விளையாடியுள்ள ரொனால்டோ, 84 கோல்கள் அடித்துள்ளார். 1 முறை கோல்டன் பூட் விருதும், 2 முறை சீசனின் சிறந்த வீரராகவும், 3 முறை ப்ரீமியர் லீக் கோப்பைகளையும் பெற்றுள்ளார்.
நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் மான்செஸ்டர் யுனைட்டெட் அணியின் இணைந்துள்ளார். இந்த தகவலை மான்செஸ்டர் யுனைட்டெட் அணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரொனால்டோ இந்த அணிக்கு திரும்பியுள்ளதால், மான்செஸ்டர் யுனைட்டெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Welcome 𝗵𝗼𝗺𝗲, @Cristiano 🔴#MUFC | #Ronaldo
— Manchester United (@ManUtd) August 27, 2021
🔴 CR7 makes his return to @ManUtd 🔴
— Premier League (@premierleague) August 27, 2021
👕 196 appearances
⚽️ 84 goals
🅰️ 34 assists
👟 1 Golden Boot
🤩 2 Player of the Season
🏆 3 #PL titles
Welcome back, @Cristiano! 👋 pic.twitter.com/VfLtn8Q3tv
Also Read: தங்கத்திலும் சேமிக்கலாம்.. லலிதா ஜூவல்லரியின் நகை முன்பதிவுத் திட்டம்!
கடந்த 2003-ம் ஆண்டு, முதல் முறையாக மான்செஸ்டர் யுனைட்டெட் அணியில் விளையாட தொடங்கிய ரொனால்டோ 2008-ம் ஆண்டு வரை அந்த அணிகாக விளையாடினார். ஐந்து வருடங்கள்தான் என்றாலும், அந்த காலக்கட்டத்தில் ரொனால்டோவின் ஃபார்ம் உச்சத்தில் இருந்தது. கோல் மழை பொழிந்த அவர். அந்த அணிக்கு முக்கிய வெற்றிகளை தேடித் தந்தார். முதலில் ஒப்பந்தமானபோதே, அதிக தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட இளம் கால்பந்து வீரரானார் ரொனால்டோ. மான்செஸ்டர் அணிக்காக, 292 போட்டிகளில் விளையாடி 118 கோல்களை அடித்துள்ளார் அவர்.
196 முறை மான்செஸ்டர் அணிக்காக விளையாடியுள்ள ரொனால்டோ, 84 கோல்கள் அடித்துள்ளார். 1 முறை கோல்டன் பூட் விருதும், 2 முறை சீசனின் சிறந்த வீரராகவும், 3 முறை ப்ரீமியர் லீக் கோப்பைகளையும் பெற்றுள்ளார். 2007-2008 சீசனில் மான்செஸ்டர் யுனைட்டெட் அணிக்காக ஒரே சீசனில் 42 கோல்கள் அடித்தார். ஒரே சீசனில் ஒரு அணிக்கு அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். மான்செஸ்டர் அணியுடன் வெற்றி பயணத்தில் இருந்தாலும், 2009-ம் ஆண்டு, 110 மில்லியன் டாலர் தொகைக்கு ரியல் மாட்ரிட் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார் ரொனால்டோ. மான்செஸ்டரில் இருந்து ரொனால்டோ விலகுவதை அந்த அணி எதிர்பார்க்கவில்லை. ஆனால், ரியல் மாட்ரிட் அணிக்காக அவர் மிகச் சிறப்பாக விளையாடினார். இந்த பந்தம் 2018-ம் ஆண்டு வரை தொடர்ந்தது.
I generally tweet cricket , but this one is a piece of info that a lot of people on my time line also would love and most definitely my friends , @Cristiano is joining @ManUtd
— DK (@DineshKarthik) August 27, 2021
A birdie tells me this news and a big shoutout to all the man utd fans . Good times ahead 😉
அதனை தொடர்ந்து 2018-ம் ஆண்டு ஜூவெண்டஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். மூன்று ஆண்டுகள் அந்த அணிக்காக விளையாடிய அவர், இப்போது மீண்டும் தொடங்கிய இடத்திற்கே திரும்ப வந்துள்ளார்.கால்பந்து ரசிகர்கள், விளையாட்டு பிரபலங்கள் என உலகெங்கிலும் இருந்து ரசிகர்கள் இந்த செய்தியை கொண்டாடி வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர் தினேஷ் கார்த்திக், “மான்செஸ்டர் அணிக்கு இனி எதிர்காலம் நல்ல காலம்” என பதிவிட்டுள்ளார்.