மேலும் அறிய
Advertisement
IPL 2021 : ஐபிஎல் கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்கள்.. கிறிஸ் கெய்லின் புதிய சாதனை
ஐபிஎல் கிரிக்கெட்டில் 350 சிக்ஸர்கள் அடித்து எந்த வீரரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார் பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் கிறிஸ் கெய்ல்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில், ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சம்சன் கடைசி வரை போராடிய நிலையிலும், அந்த அணி தோல்வியுற்றது. முன்னதாக, முதலில் பஞ்சாப் விளையாடியபோது, அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் மூன்றாவது வீரராக களமிறங்கினார். 28 பந்துகளை எதிர்கொண்ட கெய்ல் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்தார். இதில், முதல் சிக்ஸர் அடிக்கும்போது ஐபிஎல் கிரிக்கெட்டில் 350ஆவது சிக்ஸரை பதிவு செய்தார்.
மொத்தமாக 351 சிக்ஸர்கள் அடித்து கெய்ல் முதலிடத்திலும், அவரை தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் டி வில்லியர்ஸ் (237 சிக்ஸர்கள்) இரண்டாவது இடத்திலும், மூன்றாவது இடத்தில் (216 சிக்ஸர்கள்) சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனியும் உள்ளனர்.
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion