Chessable Masters 2022: காலிறுதியில் சீன வீரரை கதற வைத்த பிரக்ஞானந்தா... அரையிறுதியில் அலற விட தயார்!
இந்தியாவின் டீன் ஏஜ் செஸ் கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் தொடரின் நாக்-அவுட் காலிறுதியில் சீனாவின் வெய் யியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார்.
இந்தியாவின் டீன் ஏஜ் செஸ் கிராண்ட்மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, செசபிள் மாஸ்டர்ஸ் ஆன்லைன் செஸ் தொடரின் நாக்-அவுட் காலிறுதியில் 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்குள் நுழைந்தார்.
உலக செஸ் சாம்பியன் போட்டியானது 9 தொடர்களாக கடந்த பிப்ரவரி மாதம் முதல் வரும் நவம்பர் மாதம் வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. 16 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டியில் 16 வயது நிரம்பிய சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தாவும் பங்கேற்றுள்ளார்.
It's Giri-Praggnanandhaa and Ding Liren-Carlsen in tomorrow's #ChessableMasters semi-finals! https://t.co/PiBDjbMRUQ#ChessChamps #c24live pic.twitter.com/u51rwtRyWs
— chess24.com (@chess24com) May 23, 2022
இந்தநிலையில், மெல்ட்வாட்டர் சாம்பியன்ஸ் செஸ் டூர் செசபிள் மாஸ்டர்ஸ் 2022 ஆன்லைன் போட்டியின் இன்று நடைபெற்ற காலிறுதியில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டர் ஆர் பிரக்னாநந்தா 2.5-1.5 என்ற கணக்கில் சீனாவின் வெய் யியை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் 16 வயதான பிரக்னாநந்தா அரையிறுதியில் அனிஷ் கிரியை (நெதர்லாந்து) சந்திக்கிறார். மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் உலகின் நம்பர்-1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், சீனாவின் டிங் லிரனை எதிர்கொள்கிறார்.
Wei Yi put up a huge fight, but Praggnanandhaa is through to a semi-final tomorrow against Anish Giri! https://t.co/PiBDjbMRUQ #ChessChamps #ChessableMasters pic.twitter.com/DA3brfKGiF
— chess24.com (@chess24com) May 23, 2022
முன்னதாக, கடந்த 21ம் தேதி நடந்த போட்டியில் ரேபிட் செஸ் போட்டியில் பிரக்ஞானந்தா நம்பர் 1 செஸ் வீரரான கார்ல்சனை எதிர்கொண்டார். இந்த போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். தொடக்கம் முதலே பிரக்ஞானந்தா கார்ல்சனுக்கு மிகுந்த நெருக்கடி அளித்தார். இதனால், கார்ல்சன் சற்று நெருக்கடிக்கு ஆளாகினார். நான்கு சுற்றுகள் முடிந்த நிலையில், 5வது சுற்றில் கார்ல்சன் குதிரையை தவறுதலாக நகர்த்தினார். இதை தனக்கு சாதகமாக்கிய பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தினார்.
இதனால், பிரக்ஞானந்தா தன்னுடைய 41வது நகர்த்தலிலே கார்ல்சனை வீழ்த்தினார். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியிலும் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்தார். சதுரங்க சாம்பியன் தொடருக்காக ஏற்கனவே மூன்று தொடர்கள் நிறைவு பெற்றுள்ள நிலையில், தற்போது 4வது சுற்று நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி விரைவில் நடைபெற உள்ள நிலையில், சென்னை சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது செஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்