![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chess World Cup 2023: இறுதிவரை விறுவிறுப்பு... டிராவில் முடிந்த பிரக்ஞானந்தா - கார்ல்சென் ஆட்டம்..! நாளை மீண்டும் மோதல்..!
உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்காக விறுவிறுப்பாக நடந்த மோதல் டிராவில் முடிந்ததால் கார்ல்சன் - பிரக்ஞானந்தா இடையேயான 2வது ஆட்டம் நாளை நடக்கிறது.
![Chess World Cup 2023: இறுதிவரை விறுவிறுப்பு... டிராவில் முடிந்த பிரக்ஞானந்தா - கார்ல்சென் ஆட்டம்..! நாளை மீண்டும் மோதல்..! Chess World Cup 2023 Final Praggnanandhaa vs Magnus Carlsen Ends in Draw Game 1 Second Game Tomorrow Aug 23 Chess World Cup 2023: இறுதிவரை விறுவிறுப்பு... டிராவில் முடிந்த பிரக்ஞானந்தா - கார்ல்சென் ஆட்டம்..! நாளை மீண்டும் மோதல்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/22/097b0b34eec3189e2fb695ec1a0401db1692713544620102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
உலகக்கோப்பை செஸ் அரையிறுதியில் வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா இன்று உலகின் நம்பர் 1 செஸ் வீரரான நார்வே நாட்டைச் சேர்ந்த பிரபல வீரர் கார்ல்சென்னுடன் மோதினார். ஏற்கனவே கார்ல்சென்னை பிரக்ஞானந்தா வீழ்த்தியிருந்த காரணத்தால் இந்த போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
கார்சல் - பிரக்ஞானந்தா மோதல்:
20 ஆண்டுகளுக்கு உலகக்கோப்பை செஸ் தொடருக்கு முன்னேறிய இந்திய வீரர் என்ற பெருமைக்குரிய பிரக்ஞானந்தா இந்த போட்டி தொடங்கியது முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பிரக்ஞானந்தாவிற்கு அனுபவமிக்க கார்ல்சென்னும் கடும் சவால் அளித்தார்.
ஆனால், ப்ரக்ஞானந்தாவின் காய் நகர்த்தலுக்கு கார்ல்சன் மிகவும் யோசித்தே காய் நகர்த்தினார். தன்னுடைய 13வது காய் நகர்த்தலுக்கு மட்டும் கார்ல்சென் 27 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். பிரக்ஞானந்தா தன்னுடைய 14வது காய் நகர்த்தலுக்கு 17 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். சிறிய தவறும் ஆட்டத்தை மாற்றிவிடும் என்பதால் இருவரும் மிகவும் நிதானமாக ஆடினர்.
The first game of the #FIDEWorldCup final between Praggnanandhaa and Magnus Carlsen ends in a draw after 35 moves.
— International Chess Federation (@FIDE_chess) August 22, 2023
Magnus will be White in tomorrow's second classical game.
📷 Stev Bonhage pic.twitter.com/UXpcbQxIfN
ஆட்டம் டிரா:
35 நகர்வுகளுக்கு பிறகு நீண்ட நேரத்திற்கு பிறகு முதல் ஆட்டத்தை இருவரும் டிரா செய்தனர். இதையடுத்து, சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்காக இருவரும் 2வது ஆட்டம் நாளை நடக்கிறது.
அஜர்பைஜானில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன் தொடரில் தொடக்கம் முதலே இந்தியாவின் சார்பில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா அபாரமாக ஆடி வந்தார். அவர் நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் உலகின் முன்னணி செஸ் ஜாம்பவான் ஃபேபியானோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மேலும், இந்த தொடரில் அவர் செக் குடியரசு நாட்டின் நம்பர் 1 வீரர், இந்தியாவிலே சிறந்த செஸ் வீரர்கள் பட்டியலில் 6ம் இடத்தில் உள்ளவர், பிரான்ஸ் நாட்டின் 2வது இடத்தில் உள்ள வீரர், உலகின் 2ம் நிலை வீரர், உலகின் 3ம் நிலை வீரர் ஆகியோரை வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: FIFA WWC 2023: "உதட்டில் முத்தம் கொடுத்தது தப்புதான்.. மன்னிச்சுடுங்க.." - வீராங்கனையை லிப்லாக் செய்த லூயிஸ் ரூபியேல்ஸ்..!
மேலும் படிக்க: Asia Cup 2023: வீரர்கள் பசியோடு இருக்காங்க, இரண்டு கோப்பையையும் தூக்காம விடமாட்டாங்க.. பாபர் அசாம் எச்சரிக்கை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)