Chess Olympiad 2022 : இன்று கடைசி தங்கம் வெல்ல வாய்ப்பு .. இது நடந்தால் போதும்.. இறுதி சுற்று போட்டிகள் இன்று..
முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கம் வழங்கப்படும்.
![Chess Olympiad 2022 : இன்று கடைசி தங்கம் வெல்ல வாய்ப்பு .. இது நடந்தால் போதும்.. இறுதி சுற்று போட்டிகள் இன்று.. chess olympiad 2022 today round 11 india have chance to win gold medal Chess Olympiad 2022 : இன்று கடைசி தங்கம் வெல்ல வாய்ப்பு .. இது நடந்தால் போதும்.. இறுதி சுற்று போட்டிகள் இன்று..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/09/45f08ddb301b8e9396596362103d2cf81660012494512109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் நடைபெற்று வரும் ஒலிம்பியாட் போட்டி இன்று கடைசி சுற்று நடைபெறுகிறது. இதன்மூலம் செஸ் ஒலிம்பியாட் போட்டி இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற பத்தாவது சுற்றில் இந்தியாவின் மகளிர் அணிகள் சிறப்பாக விளையாடினர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் மகளிர் பிரிவில் இந்தியாவின் 3 அணிகளும் வெற்றி அடைந்தது. இந்திய மகளிர் ஏ அணி கஜகஸ்தான் அணியை 3.5- 0.5 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது. இந்திய மகளிர் பி அணி நெதர்லாந்து அணியையும் மற்றும் இந்திய மகளிர் சி அணி ஸ்வீடன் அணியை வென்றுள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் இதுவரை பதக்கமே வாங்காமல் இருந்த இந்திய மகளிர் அணி இன்று தங்க பதக்கத்தை வெல்ல வாய்ப்புள்ளது. புள்ளி பட்டியலில் இந்திய A மகளிர் அணி முதல் இடத்தில் உள்ளனர் என்பது குறிப்புடத்தக்கது . தமிழ்நாட்டை சேர்ந்த நந்திதா வெற்றி பெற்றுள்ளார்.
10 சுற்று முடிவில் (மகளிர் பிரிவு) முதல் 10 இடங்கள்
1 இந்தியா
2 போலந்து
3 அஜர்பைஜான்
4 உக்ரைன்
5 ஜார்ஜியா
6 இந்தியா பி
7 அமெரிக்கா
8 கஜகஸ்தான்
9 இந்தியா சி
10 ஸ்லோவாக்கியா
கடைசி சுற்றில் இந்திய மகளிர் 'ஏ' அணி வெற்றிபெற்றால் தங்கம் உறுதியாகும். டிரா செய்தால் மற்ற அணிகளின் முடிவைப் பொறுத்து பதக்க வாய்ப்பு அமையும்.
பொது பிரிவு 10வது ரவுண்ட் முடிவுகள்
இந்தியா B - உஸ்பெகிஸ்தான்
குகேஷ் டி -- வெற்றி
சரின் நிஹால் -- சமன்
பிரக்ஞானந்தா ஆர் -- வெற்றி
அதிபன் பி -- சமம்
இந்தியா A
ஹரிகிருஷ்ணா -- தோல்வி
விதித் சந்தோஷ் குஜராத்தி -- வெற்றி
எரிகைசி அர்ஜுன் -- சமன்
நாராயணன் எஸ்.எல் -- வெற்றி
இந்தியா 3 - ஸ்லோவாக்கியா
கங்குலி சூர்யா சேகர் -- சமன்
சேதுராமன் எஸ்.பி -- தோல்வி
கார்த்திகேயன் முரளி -- சமன்
பூரணிக் அபிமன்யு -- வெற்றி
10 சுற்று முடிவில் (ஓபன் பிரிவு) பமுதல் 10 இடங்கள்
1 உஸ்பெகிஸ்தான்
2 ஆர்மீனியா
3 இந்தியா பி
4 மற்றும்
5 அமெரிக்கா
6 நெதர்லாந்து
7 ஸ்பெயின்
8 இங்கிலாந்து
9 ஜெர்மனி
10 செர்பியா
ஓபன் பிரிவில் இந்திய பி அணி வெற்றி அடைந்தால் வெள்ளி அல்லது வெண்கல பதக்கம் வெல்ல வாய்ப்பு உள்ளது. அல்லது ஓபன் பிரிவில் முதல் இரண்டு இடத்தில் இருக்கக்கூடிய உஸ்பெகிஸ்தான் மற்றும் அர்மேனியா அணிகள் இன்றைய ஆட்டத்தில் தாங்கள் ஆடக்கூடிய எதிரணியிடம் தோல்வியை சந்தித்து இந்திய ஓபன் பி அணி எதிர்த்து ஆடக்கூடிய ஜெர்மன் அணியை வீழ்த்தும் பட்சத்தில், இந்திய ஓபன் பி அணிக்கு தங்கப் பதக்கத்திற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இன்றைய போட்டிகள்
இன்றைய ஆட்டத்தில் ஓபன் பிரிவில் புள்ளி பட்டியலில் 4 ம் இடத்தில் உள்ள இந்திய ஏ அணி 5 ம் இடத்தில் உள்ள அமெரிக்கா அணியுடன் மோத உள்ளது. புள்ளி பட்டியலில் 3 ம் இடத்தில் உள்ள இந்திய ஓபன் பி அணி 9 ம் இடத்தில் உள்ள ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது. இந்திய ஓபன் சி அணி கஜகஸ்தான் அணியுடன் மோத உள்ளது.புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய மகளிர் ஏ அணி 7 ம் இடத்தில் உள்ள அமெரிக்கா அணியுடன் மோத உள்ளது. இந்திய மகளிர் பி அணி ஸ்லோவாக்கியா அணியுடனும், இந்திய மகளிர் சி அணி கஜகஸ்தான் அணி உடனும் மோத உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)