Chess Olympiad 2022: சென்னையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள்! மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் 18 குழுக்கள் !
சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ஏற்பாடு பணிகளுக்கு 18 குழுக்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி இம்முறை சென்னையில் நடைபெற உள்ளது. வரும் ஜூலை மாதம் 27ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை இந்த ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளில் தமிழ்நாடு அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது.
இந்நிலையில் இந்த செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பணிகளை மேற்கொள்ள 18 குழுக்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் இந்தக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இந்தக் குழுவில் சுமார் 37 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்தத் தொடருக்கும் வீரர்களின் வரவேற்பு, போக்குவரத்து, ஸ்பான்சர்சிப், துவக்கம் மற்றும் முடிவு விழா உள்ளிட்ட அனைத்திற்கும் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு மற்றும் சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்