மேலும் அறிய
Advertisement
Chess Olympiad 2022: நள்ளிரவில் நாடு திரும்பிய பாகிஸ்தான் வீரர்கள்... பின்னணி இதுதான்..!
பாகிஸ்தான் நாட்டு செஸ் விளையாட்டு வீரா்கள் 19 போ், ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்ளாமல், சென்னையிலிருந்து புனே புறப்பட்டு சென்றனா்.
44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொள்வதற்காக,பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர்கள் 19 பேர், நேற்று காலை புனேவிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தனர். அவர்களை சென்னை விமான நிலையத்தில், தமிழக அரசு அதிகாரிகளும், ஒலிம்பியாட் வரவேற்பு குழுவினரும் வரவேற்றனா். பின்பு அவர்களை சொகுசு வாகனங்களில், அவா்கள் தங்கும் இடமான, சென்னை ஓஎம்ஆர் சாலை சிறுசேரியில் உள்ள தனியாா் நட்சத்திர விடுதிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் அவர்கள் 19 பேரும் நேற்று இரவு திடீரென சிறுசேரி நட்சத்திர விடுதியில் இருந்து சொகுசு வாகனங்களில் புறப்பட்டு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தனா். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புனே செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், அவர்கள் புனேவுக்கு திரும்பி சென்றனர். அவா்களை அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனா். இது சம்பந்தமாக விசாரித்த போது, பாகிஸ்தான் நாட்டு அரசு, அவர்களை செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டதாகவும், எனவே அவர்கள் செஸ் விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ளாமல் திரும்பிச் சென்று விட்டனர் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "விளையாட்டுடன் அரசியலை கலக்கும் இந்தியாவின் முயற்சியை பாகிஸ்தான் கண்டிக்கிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வேண்டாம் என பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. மேலும், இந்த விவகாரத்தை சர்வதேச செஸ் கூட்டமைப்பிடம் உயர்மட்ட அளவில் எழுப்புவோம் என தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் திடீர் விலகல் முட்டையில் இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
செஸ் போட்டிகள் இன்று நடைபெறுகிறது
மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று மதியம் 2 மணியிலிருந்து இரவு 8 மணி அளவில் வரை போட்டிகள் நடைபெற உள்ளது. மாமல்லபுரம் பூஞ்சேரி வரை வீரர்கள் தங்கி இருக்கும் ஓட்டல்களில் இருந்து வந்து செல்வதற்கு என ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இதே போல காவலர்களும் நான்காயத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பணிக்கு ஈடுபடுத்தப்பட உள்ளனர். சர்வதேச அளவில் பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணம் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
கிரிக்கெட்
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion