Chess Olympiad 2022: செஸ் ஒலிம்பியாட்டில் உலக தரவரிசையில் 5-ஆம் நிலை வீரரை வீழ்த்திய குகேஷ்.. தொடர்ச்சியாக 8-வது வெற்றி..
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 8வது சுற்றில் இந்திய பி அணி அமெரிக்காவை எதிர்த்து விளையாடி வருகிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இன்று 8வது சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இந்தியா ஏ அணி உக்ரைன் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தியா பி அணி அமெரிக்கா அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தியா சி அணி போலாந்து நாட்டு அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்தியா பி அணியில் கிராண்ட் மாஸ்டர் குகேஷ் இடம்பெற்று இருந்தார். அதில் அவர் ஃபபியானோ கருணாவை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசையில் 5ஆம் இடத்திலுள்ள கருணாவிற்கு எதிரான போட்டி குகேஷிற்கு சாவலாக இருக்கும் என்று கருதப்பட்டது. இந்தப் போட்டியில் அசத்தலாக விளையாடிய குகேஷ் 45வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதன்மூலம் நடப்பு செஸ் ஒலிம்பியாட் தொடரில் விளையாடிய 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று இவர் அசத்தியுள்ளார்.
16-year-old Gukesh D wins once again, beating the world's #5 Fabiano Caruana with the black pieces, and has 8 out of 8 now!😮#ChessOlympiad pic.twitter.com/aYAbHcHb8C
— International Chess Federation (@FIDE_chess) August 6, 2022
இந்திய பி அணியில் இடம்பெற்றுள்ள பிரக்ஞானந்தா வெஸ்லிக்கு எதிரான போட்டியில் இவர் டிரா செய்தார். ரோனக் சத்வானி தன்னுடைய போட்டியில் வெற்றி பெற்றார். இதன்காரணமாக பலம் வாய்ந்த அமெரிக்கா அணியை இந்திய பி அணி 3-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்