கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்திற்கு கொரோனா தொற்று..
சச்சின், யூசுப் பதான் ஆகியோரைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர் பத்ரிநாத்திற்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற லெஜன்ட்ஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய லெஜண்ட்ஸ் அணியில் சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், யூசுப் பதான், பத்ரிநாத் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், சச்சின் டெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சச்சின் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டதாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதே தொடரில் பங்கேற்ற யூசுப் பதானும் தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் தெரிவித்தார். இந்த நிலையில், அதே தொடரில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த பத்ரிநாத்துக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பத்ரிநாத் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.