22வது கிராண்ட்ஸ்லாம் வென்ற ஜோக்கோவிச்… 10வது ஆஸி. ஓபன் வெற்றி! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?
இரண்டாம் இடம் பிடித்த சிட்சிபாஸ் ஆஸ்திரேலிய டாலரில் 1,625,000 பெறுகிறார். கடந்த ஆண்டு இரண்டாம் இடம் பிடித்தவரை விட ஆஸ்திரேலிய டாலர் 50,000 அதிகம் சம்பாதிக்கிறார்.
2023 ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் 6-3, 7-6(4), 7-6(5) என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி 10வது ஆஸ்திரேலிய ஓபன் பட்டம் வென்றதோடு, மொத்தமாக ஒற்றையர் பிரிவில் 22 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டம் வாங்கி ரபேல் நடாலுடன் சமன் செய்ததோடு சர்வதேச டென்னிஸ் தரவரிசியிலும் கார்லோஸ் அல்கராஸை முந்தி நம்பர் 1 தரவரிசைக்குத் திரும்பி ஒரே வெற்றியில் பல சாதனைகளை செய்துள்ளார்.
கடந்து வந்த பாதை
ஜோகோவிச் ஆசிய-பசிபிக் மேஜரை வெல்ல ஆர்வமாக இருந்தார். 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் ராபர்டோ கார்பலேஸ் பெய்னாவை வீழ்த்தி 6-1, 6-7(5), 6-2, 6-0 என்ற கணக்கில் என்ஸோ குவாக்காட்டை தோற்கடித்தார். அடுத்த போட்டியில் 7-6(7), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் 27ஆம் நிலை வீரரான கிரிகோர் டிமிட்ரோவை வீழ்த்தி முன்னேறி 22ஆம் நிலை வீரரான அலெக்ஸ் டி மினாருடன் மோதி, 6-2, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இறுதி போட்டியில் சிட்சிபாஸ்
காலிறுதியில், ஜோகோவிச் 6-1, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ஐந்தாம் நிலை வீரரான ஆண்ட்ரி ரூப்லெவ்வை தோற்கடித்து, அரையிறுதியில் டாமி பாலை 7-5, 6-1, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். ஆஸ்திரேலிய ஓபனை வெல்வதற்கு இறுதிப்போட்டியில் செர்பிய வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை 11வது முறையாக வென்று கோப்பையை தட்டி சென்றார். ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் மெல்போர்னில் 6-3, 6-4, 7-6(6) என்ற செட் கணக்கில் குவென்டின் ஹாலிஸை வீழ்த்தி, ரிங்கி ஹிஜிகாடா மற்றும் டாலன் க்ரீக்ஸ்பூர் ஆகியோருக்கு எதிராக நேர் செட் வெற்றிகளைப் பதிவுசெய்து நான்காவது இடத்தைப் பிடித்தார்.
இரண்டாம் இடம் பிடித்த சிட்சிபாஸ்
சிட்சிபாஸ் இத்தாலியை 6-4, 6-4, 3-6, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார், அதில் அவர் 6-3, 7-6(2), 6-4 என்ற கணக்கில் ஜிரி லெஹெக்காவை வீழ்த்தினார். அவர் 18ஆம் நிலை வீரரான கரேன் கச்சனோவை 7-6(2), 6-4, 6-7(6), 6-3 என்ற செட் கணக்கில் அரையிறுதியில் தோற்கடித்து தனது இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் இறுதிப் போட்டியை எட்டினார். இருதிப்போட்டியில் அவர் நோவக் ஜோகோவிச்சிடம் தொற்று கோப்பையை நழுவவிட்டார்.
பரிசுத்தொகை எவ்வளவு
மெல்போர்னில் நோவக் ஜோகோவிச் வென்ற நிலையில் அவருக்கு 29,75,000 ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசாக கிடைக்கும். இது 2022 ஆஸ்திரேலிய ஓபனை வென்ற ரஃபேல் நடால் சம்பாதித்ததை விட 1,00,000 ஆஸ்திரேலிய டாலர்கள் அதிகம். ஆஸ்திரேலிய ஓபனில் இரண்டாம் இடம் பிடித்த சிட்சிபாஸ் ஆஸ்திரேலிய டாலரில் 1,625,000 பெறுகிறார். கடந்த ஆண்டு இரண்டாம் நிலை வீரரான டேனில் மெட்வெடேவ் சம்பாதித்ததை விட ஆஸ்திரேலிய டாலர் 50,000 அதிகம் சம்பாதிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.