Asian Games 2023 Medal Tally: 11 தங்கம் உள்பட 41 பதக்கங்கள் வென்று பட்டியலில் 4வது இடத்தில் இந்தியா
Asian Games 2023 Medal Table: பெண்களுக்கான கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
19வது ஆசிய போட்டியில் இந்தியா பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இந்தியா 11 தங்கம், 16 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 41 பதக்கங்கள் இதுவரை வென்றுள்ளது.
9வது நாளான இன்று போட்டிகள் தொடங்கிய சிறுது நேரத்தில் இந்திய அணியின் ஆண்கள் துப்பாக்கி சுடுதல் ட்ராப் அணி தங்கப்பதக்கத்தையும், இதையடுத்து ராஜேஸ்வரி குமாரி, ப்ரீத்தி ரஜக், மனிஷா கீர் அடங்கிய மகளிர் ட்ராப் அணி வெள்ளிப் பதக்கத்தை சேர்த்தது. ஹாங்சோ விளையாட்டுப் போட்டியில் துப்பாக்கிச் சுடுதல் மூலம் இந்தியா பெற்ற 20வது பதக்கம் இதுவாகும். அதேபோல், பெண்களுக்கான கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன் மூலம் கோல்ஃப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.
ஆனால் இன்று முதல் தங்கம் ஜொரவர் சிங் சந்து, கினான் டேரியஸ் சென்னை மற்றும் பிருத்விராஜ் தொண்டைமான் ஆகியோரின் ஆடவர் ட்ராப் அணியிடமிருந்து வந்தது.
பதக்கப்பட்டியல்
தரவரிசை | நாடு | தங்கம் | வெள்ளி | வெண்கலம் | மொத்தம் |
1 | சீனா | 115 | 70 | 36 | 221 |
2 | ஜப்பான் | 29 | 38 | 39 | 106 |
3 | கொரிய குடியரசு | 29 | 31 | 56 | 116 |
4 | இந்தியா | 11 | 16 | 14 | 41 |
5 | உஸ்பெகிஸ்தான் | 10 | 11 | 16 | 37 |
6 | தாய்லாந்து | 10 | 5 | 14 | 29 |
7 | சீன தைபே | 8 | 10 | 10 | 28 |
8 | ஹாங்காங் (சீனா) | 5 | 15 | 18 | 38 |
9 | DPR கொரியா | 5 | 7 | 4 | 16 |
10 | இந்தோனேசியா | 4 | 3 | 11 | 18 |
ஆசிய நாடுகளிடையே விளையாட்டு மற்றும் நட்பை மேம்படுத்துவதற்காக நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒரு முக்கிய சர்வதேச பல விளையாட்டு ஆசிய போட்டிகள் ஆகும். ஆசியா முழுவதிலும் உள்ள தடகள வீரர்கள் உள்ளிட்ட பல விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் இந்த போட்டியில் தடகளம், நீர் விளையாட்டுகள், வில்வித்தை, பேட்மிடன், பேஸ்பால், கூடைப்பந்து, குத்துச்சண்டை, கேனோயிங், சைக்கிள் ஓட்டுதல், குதிரையேற்றம், வாள்வீச்சு, கால்பந்து, கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஹாக்கி, ஜூடோ, கபடி, கராத்தே உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுவர். இதுமட்டும் இல்லாமல் நவீன பென்டத்லான், ரோயிங், ரக்பி செவன்ஸ், படகோட்டம், படப்பிடிப்பு, சாப்ட்பால், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், டிரையத்லான், கைப்பந்து, பளு தூக்குதல், மல்யுத்தம் மற்றும் வுஷூ ஆகிய போட்டிகளும் நடத்தப்படுகின்றன.
ஆசிய விளையாட்டுகளன் விபரம்
Indian🇮🇳 men's Trap team clinch 🥇after scoring 361 at #AsianGames2023
— Khel Now (@KhelNow) October 1, 2023
Kynan Chenai and Zoravar Singh through to the final in the individual category.#AsianGames #Shooting pic.twitter.com/Og22VzCMZB
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்சோவில் செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8, 2023 வரை நடைபெற்றது. மொத்தம் 45 ஒலிம்பிக் விளையாட்டுகள் மற்றும் 61 துறைகளில் 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருந்து 11,000 க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர்.
செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி தொடங்கிய ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்டோபர் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.