Asian Games 2023 Medal Tally: ஒட்டுமொத்தமாக நூறு.. ஆசிய விளையாட்டில் பதக்கங்களை குவித்த இந்தியாவை பாரு.. புதிய வரலாறு படைப்பு!
இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்தியாவுக்காக 100வது பதக்கத்தையும், 25 வது தங்கப்பதக்கத்தையும் வென்று கொடுத்தனர்.
ஆசிய விளையாட்டு 2023ல் இந்தியா இன்று 100 பதக்கங்களை வென்று புதிய வரலாறு படைத்துள்ளது. இந்த செய்தியை எழுதும்வரை 25 தங்கம் உள்பட மொத்தமாக 100 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. இந்திய மகளிர் கபடி அணி இறுதிப் போட்டியில் சீன தைபே அணியை வீழ்த்தி இந்தியாவுக்காக 100வது பதக்கத்தையும், 25 வது தங்கப்பதக்கத்தையும் வென்று கொடுத்தனர். இந்த போட்டியில் இந்தியா 26-24 என சீன தைபே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தியா இதுவரை வென்ற ஆசிய விளையாட்டு 2023 பதக்கங்கள்: விளையாட்டின் அடிப்படையில்..
துப்பாக்கி சுடுதல் | 7 | 9 | 6 | 22 |
படகோட்டுதல் | 0 | 2 | 3 | 5 |
கிரிக்கெட் | 1 | 0 | 0 | 1 |
படகோட்டம் | 0 | 1 | 2 | 3 |
குதிரையேற்றம் | 1 | 0 | 1 | 2 |
வுஷூ | 0 | 1 | 0 | 1 |
டென்னிஸ் | 1 | 1 | 0 | 2 |
ஸ்குவாஷ் | 2 | 1 | 2 | 5 |
தடகளம் | 6 | 14 | 9 | 29 |
கோல்ஃப் | 0 | 1 | 0 | 1 |
குத்துச்சண்டை | 0 | 1 | 4 | 5 |
பேட்மிண்டன் | 0 | 1 | 1 | 2 |
ரோலர் ஸ்கேட்டிங் | 0 | 0 | 2 | 2 |
டேபிள் டென்னிஸ் | 0 | 0 | 1 | 1 |
கேனோ | 0 | 0 | 1 | 1 |
வில்வித்தை | 5 | 2 | 2 | 9 |
மல்யுத்தம் | 0 | 0 | 5 | 5 |
செபக்டக்ராவ் | 0 | 0 | 1 | 1 |
சீட்டுக்கட்டு | 0 | 1 | 0 | 1 |
ஹாக்கி | 1 | 0 | 0 | 1 |
கபடி | 1 | 0 | 0 | 1 |
மொத்தம் | 25 | 35 | 40 | 100 |
ஆசிய விளையாட்டு போட்டியில் ஆண்டு அடிப்படையில் இந்தியா இதுவரை வென்ற பதக்கங்கள் விவரம்:
India in Asian Games since 2000:
— Johns. (@CricCrazyJohns) October 7, 2023
2002 - 36 medals.
2006 - 53 medals.
2010 - 65 medals.
2014 - 57 medals.
2018 - 70 medals.
2023 - 100* medals.
The improvement in Indian sporting rise is just incredible.....!!! pic.twitter.com/nSe5oBEJsD
2000 முதல் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா:
2002 - 36 பதக்கங்கள்.
2006 - 53 பதக்கங்கள்.
2010 - 65 பதக்கங்கள்.
2014 - 57 பதக்கங்கள்.
2018 - 70 பதக்கங்கள்.
2023 - 100* பதக்கங்கள்.
பிரதமர் மோடி வாழ்த்து:
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா ஒட்டுமொத்தமாக 100 பதக்கங்களை வென்றதற்கு இந்திய பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், “ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு மிகப்பெரிய சாதனை! 100 பதக்கங்கள் என்ற குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியதில் இந்திய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்தியாவிற்கான இந்த வரலாற்று மைல்கல்லுக்கு வழிவகுத்த நமது அற்புதமான விளையாட்டு வீரர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரமிக்க வைக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் சரித்திரம் படைத்து, நம் இதயங்களை பெருமையால் நிரப்பியது.
A momentous achievement for India at the Asian Games!
— Narendra Modi (@narendramodi) October 7, 2023
The people of India are thrilled that we have reached a remarkable milestone of 100 medals.
I extend my heartfelt congratulations to our phenomenal athletes whose efforts have led to this historic milestone for India.… pic.twitter.com/CucQ41gYnA
வரும் 10ஆம் தேதி நமது ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கும், எங்கள் விளையாட்டு வீரர்களுடன் உரையாடுவதற்கும் ஆவலுடன் காத்திருக்கிறேன்.” என குறிப்பிட்டு இருந்தார்.
1 | சீனா | 187 | 104 | 63 | 354 |
2 | ஜப்பான் | 47 | 57 | 65 | 169 |
3 | தென் கொரியா | 36 | 50 | 84 | 170 |
4 | இந்தியா | 25 | 35 | 40 | 100 |
5 | உஸ்பெகிஸ்தான் | 20 | 18 | 26 | 64 |
6 | சீன தைபே | 17 | 16 | 25 | 58 |
7 | கொரியா ஜனநாயக மக்கள் குடியரசு | 11 | 18 | 10 | 39 |
8 | தாய்லாந்து | 10 | 14 | 30 | 54 |
9 | பஹ்ரைன் | 10 | 3 | 5 | 18 |
10 | கஜகஸ்தான் | 9 | 18 | 41 | 68 |
பதக்கப் பட்டியலில் இந்தியா 4வது இடம்:
பதக்கப் பட்டியலில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. இந்தியா 100 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தப் பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. சீனா இதுவரை 356 பதக்கங்களை வென்றுள்ளது. அதில் 188 தங்கம், 105 வெள்ளி மற்றும் 63 வெண்கலப் பதக்கங்களை தனதாக்கியுள்ளது. இந்த பட்டியலில் ஜப்பான் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஜப்பான் இதுவரை 47 தங்கம் உட்பட 169 பதக்கங்களை வென்றுள்ளது. கொரியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரியா 36 தங்கம், 50 வெள்ளி மற்றும் 86 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது. அவர்கள் மொத்தம் 172 பதக்கங்களை வென்றுள்ளனர்.