Asian Games 2023: 5 ஆயிரம் மீட்டரில் அடித்தது வெள்ளி: சாதித்த இந்திய வீரர் அவினேஷ் சாப்ளே
19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
Asian Games 2023: ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவின் அவினேஷ் சாப்ளே வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா இதுவரை மொத்தம் 81 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதன் மூலம் இந்தியா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் அதிக பதக்கங்கள் வென்று, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தனது தனிப்பட்ட சாதனையைப் படைத்துள்ளது.
ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸில் 8:19:50 வினாடிகளில் ஓடி, கேம்ஸ் சாதனையை முறியடித்து தங்கப் பதக்கத்தை ஏற்கனவே அவினேஷ் சேபிள் வென்றார்.
2022 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற அவினேஷ் சேபிள், 3 ஆயிரம் மீ ஸ்டீபிள்சேஸில் இலக்கினை 8 நிமிடங்கள் 11.20 நிமிடங்களில் கடந்து தேசிய சாதனை படைத்துள்ளார். அவரது தனி சாதனை 8:11.63 ஆகும், அவர் ஜப்பானின் மியுரா ரியூஜிக்கு பின்னால் ஆசியர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ் போட்டியில் தங்கம் வென்ற பின்னர் அவர் கூறுகையில், தங்கம் வெல்வதே எனது முக்கிய நோக்கமாக உள்ளது, ஆனால் நான் 5000 மீட்டர் ஓட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறேன் என தெரிவித்திருந்தார்.
இந்த ஆசிய விளையாட்டு போட்டியில் அவினேஷ் சாப்ளே மட்டும் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸில் தங்கமும் 5 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள் சேஸில் வெள்ளியும் வென்றுள்ளார்.