Asia Cup 2022: 4-4 கோல்.. போராடியும் பயனில்லை... இறுதிபோட்டி வாய்ப்பை இழந்த இந்திய ஹாக்கி அணி!
ஆசியக் கோப்பை ஹாக்கி 2022 தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பின்தங்கியது.
ஆசியக் கோப்பை ஹாக்கி 2022 தொடரில் (இன்று) செவ்வாய்க்கிழமை தென் கொரியாவுக்கு எதிராக 4-4 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்ததால், நடப்பு சாம்பியனான இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து பின்தங்கியது.
சூப்பர் 4 கட்டத்தில் இந்தியா, மலேசியா, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய இரு அணிகளும் தலா ஐந்து புள்ளிகளுடன் முடிவடைந்தநிலையில், பிரேந்திர லக்ரா அணிக்கு எதிரான போட்டியில் கோல் எண்ணிக்கை வித்தியாசத்தில் இந்திய அணி பின்தங்கியது.
Asia Cup 2022: India vs Korea match ends in a 4-4 draw in the Super 4-s stage
— ANI (@ANI) May 31, 2022
India fails to make it to the final of Asia Cup 2022
இன்று நடந்த இந்தியா தென் கொரியாவுக்கு எதிரான போட்டியில் சார்பில் நிலம் சஞ்சீப் செஸ் (9வது நிமிடம்), டிப்சன் டிர்கி (21வது), மகேஷ் ஷேஷே கவுடா (22வது), சக்திவேல் மாரீஸ்வரன் (37வது) ஆகியோர் கோல் அடித்தனர். கொரியா சார்பில் ஜாங் ஜாங்யுன் (13வது), ஜி வூ சியோன் (18வது), கிம் ஜங்ஹூ (18வது நிமிடம்), கிம் ஜங்ஹூ ( 28வது இடம்) மற்றும் ஜங் மஞ்சே (44வது) ஆகிய நிமிடங்களில் கோலை பதிவு செய்தனர்.
End of Q3. Scores Leveled. Still cloudy with a chance of lightning goals coming Korea's way as team India prepares to strike harder.
— Hockey India (@TheHockeyIndia) May 31, 2022
IND 4-4 KOR#IndiaKaGame #HockeyIndia #HeroAsiaCup #MatchDay #INDvsKOR @CMO_Odisha @sports_odisha @IndiaSports@Media_SAI
தென் கொரியா (நாளை) புதன்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் மலேசியாவை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் இந்தியா மூன்றாவது நான்காவது இடத்திற்கான போட்டியில் ஜப்பானை எதிர்கொள்ள இருக்கிறது.
So near, yet so far!
— India_AllSports (@India_AllSports) May 31, 2022
India miss OUT on Final spot in Asia Cup Hockey as they drew with South Korea 4-4 in their final match of Super 4 stage.
👉 India finish with same points as South Korea but missed out on lower goal difference.
👉 India will play Japan for Bronze medal. pic.twitter.com/8xPTDWOWrB
இதுவரை ஆசிய கோப்பை தொடரில் இந்தியா மூன்று முறை ஆசிய கோப்பை ஹாக்கி பட்டத்தை வென்றுள்ளது. அதேபோல், தென் கொரியா நான்கு முறை கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்