மேலும் அறிய

Argentina vs France LIVE: உலகக்கோப்பையை ஏந்திய மெஸ்ஸி..! சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா...!

Argentina vs France FIFA World Cup Final 2022 LIVE: 22வது உலகக்கோப்பை கால்பந்தின் இறுதிப்போட்டியின் லைவ் அப்டேட்ஸை ஏபிபி நாடு தளத்தில் இங்கு காணலாம்.

Key Events
Argentina vs France Final LIVE Updates FIFA World Cup 2022 Final Live Score ARG vs FRA Qatar Football WC Winner Runner-up Team Argentina vs France LIVE: உலகக்கோப்பையை ஏந்திய மெஸ்ஸி..! சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா...!
அர்ஜெண்டினா - பிரான்ஸ் Argentina vs France FIFA World Cup Final 2022 LIVE
Source : AFP & Getty Images

Background

கத்தாரில் கடந்த மாதம் 20-ந்தேதி கோலாகலமாக தொடங்கிய தொடரில்,  32 நாடுகள் பங்கேற்றன.  உலகக்கோப்பை தொடரில்  4 முறை சாம்பியனான ஜெர்மனி முதல் சுற்றுடன் நடையை கட்ட, கோப்பையை வெல்லும் என  எதிர்பார்க்கப்பட்ட  உலகின் நம்பர் ஒன் அணியும், 5 முறை சாம்பியனுமான பிரேசில் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனிடையே, நாக்-அவுட் சுற்றுகளில் அடுத்தடுத்து வெற்றியை பதிவு செய்து, முன்னாள் சாம்பியனான மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினாவும், நடப்பு சாம்பியனான பிரான்சு அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.

உலகக்கோப்பை யாருக்கு என உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் இடையேயான எதிர்பார்ப்பு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரான்ஸ்-அர்ஜென்டினா அணிகள் மோதும் இறுதிப்போட்டி இன்று இரவு இந்திய நேரப்படி 8.30 மணிக்கு லுசைல் ஐகானிக் மைதானத்தில் தொடங்க உள்ளது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெற்றாலும், அது அந்த அணி வெல்லும் 3-வது உலகக் கோப்பையாக இருக்கும்.

அர்ஜெண்டினா அணி நிலவரம்:

மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி, தனது முதல்  லீக் போட்டியில் சவுதி அரேபியாவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தாலும்,  சுதாரித்துக் கொண்டு தொடர் வெற்றியால் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.  அரையிறுதியில் 3 கோல்கள் போட்டு வலுவான குரோஷியாவை வீழ்த்தியது. கேப்டன் லியோனல் மெஸ்ஸி நடப்பு தொடரில் 5 கோல்கள் அடிக்க, இளம் வீரரான ஜூலியன் அல்வாரஸ் 4 கோல்கள் அடித்து அணிக்கான வெற்றி நட்சத்திரங்களாக உள்ளனர்.

அர்ஜென்டினாவின் வேராக விளங்கும் 35 வயதான மெஸ்ஸிக்கு இதுவே கடைசி உலகக் கோப்பை போட்டியாக கருதப்படுகிறது. சர்வதேச போட்டியில் பல்வேறு கோப்பைகளை கைப்பற்றி இருந்தாலும், இதுவரை ஒருமுறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை. அவரது விளையாட்டு வாழ்க்கை முழுமை பெற வேண்டும் என்றால் உலகக் கோப்பையை வென்றாக வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

பந்தை துரிதமாக கடத்தி செல்வதிலும், லாவகமாக சகாக்களுக்கு தட்டிக்கொடுப்பதிலும் அற்புதமாக செயல்படும் மெஸ்ஸி, பந்துடன் வலையை நெருங்கினாலும் எல்லாநேரமும் அவரே கோலடிக்க முயற்சிப்பதில்லை. எதிராளி தடுத்துவிடுவார் என்று உணர்ந்து விட்டால், தனிநபர் சாதனையை கருத்தில் கொள்ளாமல்,  உடனடியாக அருகில் உள்ள சக வீரருக்கு பந்தை 'பாஸ்' செய்து அணியின் வெற்றிக்காக செயல்படுவது மெஸ்ஸியின் புகழுக்கு பெரும் காரணமாக உள்ளது. அர்ஜென்டினா நாட்டு கால்பந்தின் அடையாளமாக உள்ள டியாகோ மாரடோனாவுடன் அடிக்கடி ஒப்பிடப்படும் மெஸ்சி, மரடோனா பாணியில் 'மேஜிக்' நிகழ்த்துவாரா? என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பிரான்ஸ் எப்படி?

நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி 1962-ம் ஆண்டுக்கு பிறகு அடுத்தடுத்து உலக கோப்பையை வெல்லும் முதல் அணி என்ற சாதனையை படைக்க வரிந்து கட்டுகிறது. அனைத்து துறையிலும் தனது பலத்தை நிரூபித்துள்ள பிரான்சு அணிக்கு, அதிவேகத்தில் விளையாடுவது கூடுதல் பலமாக உள்ளது. இதுவரை 5 கோல்கள் அடித்துள்ள கிலியன் எம்பாப்பே, 4 கோல் போட்டுள்ள ஒலிவியர் ஜிரூட், 3 கோல் அடிக்க துணை நின்றுள்ள கிரீஸ்மான் மற்றும் பெர்னாண்டஸ், கேப்டனும், கோல் கீப்பருமான ஹூகோ லோரிஸ் உள்ளிட்டோர் அந்த அணிக்கு வலு சேர்க்கிறார்கள்.

எம்பாப்பே கோல் அடிப்பதை தடுப்பதை மையப்படுத்தியே, அர்ஜெண்டினா அணியின் கள வியூகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  பிரான்ஸ் அணியில் சில வீரர்கள் வைரஸ் தொற்றால் உடல்நலக்குறைவுக்கு ஆளான போதிலும் அதனால் எந்த பிரச்சினையும் இல்லை, முழு கவனமும் இறுதிப்போட்டி மீதே இருப்பதாக பயிற்சியாளர் டெசாம்ப்ஸ் தெரிவித்தார்.

தங்க காலணி யாருக்கு?:

நடப்பு தொடரில் இதுவரை பிரான்சின் எம்பாப்பே மற்றும் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி ஆகியோர் தலா 5 கோல்கள் அடித்து, அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.  ஒருவேளை இறுதிப்போட்டி முடிந்த பின்னும் இதே நிலை தொடர்ந்தால், குறைந்த எண்ணிக்கையிலான பெனால்டி கோல்களைப் பெற்ற வீரருக்கு தங்க காலணி வழங்கப்படும்.  லியோனல் மெஸ்ஸி நெதர்லாந்து, குரோஷியா மற்றும் சவுதி அரேபியா ஆகிய அணிகளுக்கு எதிராக தலா ஒரு பெனால்டியை கோலாக மாற்றியுள்ளார், அதே நேரத்தில் எம்பாப்பேவின் அனைத்து கோல்களும் அவுட்பீல்டில் இருந்து வந்தவை.

அதனால் தங்க காலணிக்காக பட்டியலில் எம்பாப்பே முன்னிலையில் இருக்கிறார். ஒரு வேளை இன்றைய போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்து எம்பாப்பே கோலடிக்கவில்லை என்றால் மெஸ்ஸிக்கு தங்க காலணி வந்து சேரும். இப்போது அந்த பிரச்சனை இல்லை, இருந்தாலும், அனுமானமாக மெஸ்ஸி மற்றும் எம்பாப்பே பெனால்டி மற்றும் அவுட்ஃபீல்ட் கோல்களின் எண்ணிக்கையிலும் சமமாக இருக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தால், அசிஸ்ட் கோல் எண்ணிக்கையை கணக்கில் எடுக்கிறார்கள். யார் அதிக கோலில் பங்கு கொண்டிருக்கிறார் என்பதை வைத்து கணக்கிடுகிறார்கள். ஒரு வேளை அந்த நிலை வந்திருந்தால் இன்னும் சிக்கல் தான், அசிஸ்ட் கோல்களில் மெஸ்ஸி எம்பாப்பே இருவருமே தலா 11 என்ற கணக்கில் தற்போதைக்கு சமமாக இருக்கிறார்கள்.

முதல் கோல் தான்...

அனைத்து பிரிவுகளிலும் அர்ஜெண்டினா, பிரான்சு அணிகள் சம போட்டியாளர்களாக திகழ்கின்றன. ரசிகர்களின் இடைவிடாத கரகோஷத்துக்கு மத்தியில் உச்சக்கட்ட நெருக்கடியை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை பொறுத்தே வெற்றி வாய்ப்பு அமையும். ஆனாலும் யார் முதல் கோலை அடிக்கிறார்களோ, ஆட்டத்தில் அந்த அணியின் கையே ஓங்கி நிற்கும். அதனால் வெற்றியை வசப்படுத்துவது யார்? என்பதை கணிக்க முடியாத சூழல் உள்ளது. 

பரிசுத்தொகை:

உலகக்கோகோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.342 கோடியும், தோல்வி அடையும் அணிக்கு ரூ.244 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது. முன்னதாக, மூன்றாவது இடம் பிடித்த குரோஷியா அணிக்கு ரூ.223 கோடியும், நான்காம் இடம் பிடித்த மொராக்கொ அணிக்கு ரூ.206 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட உள்ளது.

23:25 PM (IST)  •  18 Dec 2022

உலகக்கோப்பையை ஏந்திய மெஸ்ஸி..! சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா...!

அர்ஜெண்டினா கோல்கீப்பர் சிறப்பாக செயல்பட்டு கோல்களை தடுத்தாலும், அர்ஜெண்டினா வீரர்கள் அடுத்தடுத்து கோல்களை அடித்தாலும் அர்ஜெண்டினா அணி பெனால்டி ஷூட் அவுட்டில் சாம்பியன் பட்டத்தை வென்றது அர்ஜெண்டினா 

Load More
New Update
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: இன்று விண்ணில் பறக்கிறது பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Lalit Modi Vijay Mallya:
"நாங்கள் மிகப்பெரிய தப்பியோடியவர்கள்" இந்தியாவை கேலி செய்து லலித் மோடி, விஜய் மல்லையா வீடியோ
Trump Epstein Files: புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
புதிய எப்ஸ்டீன் கோப்புகள்; ட்ரம்ப் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு; நீதித்துறை சொல்வது என்ன.?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அதிமுக கூட்டணியில் பாமக, அமமுக, தேமுதிக, ஓபிஎஸ் தரப்பு.. பாஜக முடிவுக்கு சம்மதம் தெரிவித்த இபிஎஸ்?
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
அரசு ஊழியர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு! இந்த தேதிக்குள்ளாக... அமைச்சர் அன்பில் மகேஸ் உறுதி!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
நாளை மின் தடை: கோவை, திருப்பூர், சேலம் உட்பட பல மாவட்டங்களில் மின்சாரம் இருக்காது! முக்கிய அறிவிப்பு!
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
விமானப் பாதுகாப்பு துறையில் புது மைல்கல்! ஐஐடி சென்னை வழங்கும் உயர்தர பயிற்சி! விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget