மேலும் அறிய
Advertisement
"அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம்போல் நடைபெற்ற இடத்தில் நடைபெறும்" - மதுரை மாவட்ட ஆட்சியர் !
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம்போல் நடைபெற்ற இடத்தில் நடைபெறும் என ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்தார்.
தமிழ் மக்களின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும், வாழ்வியலையும் போற்றும் வகையில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடக்கும் தமிழர்களின் வீர விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி உலக பிரசித்தி பெற்றது. முக்கியமாக இதில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று இடங்களில் நடைபெறுவது சிறப்பு மிக்கது. இதில் உலக நாடுகளே வியக்கும் வகையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டானது விறுவிறுப்பாக நடைபெறும். இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை தற்போது அரசே விழாவாக எடுத்து நடத்தி வருகிறது.
இந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பதற்காக உள்ளூர் மக்கள் முதல் உலக நாடுகளில் உள்ள பல்வேறு சுற்றுலா பயணிகள் வந்து ஆண்டுதோறும் பார்வையிடுகின்றனர். ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டியை காண்பது மிகவும் நெருக்கடியான சூழ்நிலை இருக்கும், இட பற்றாக்குறை ஏற்படும். இந்த சூழ்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டி உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை எனும் கிராமத்தில் தமிழக அரசு சார்பாக ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. இயற்கை எழில் கொஞ்சும் மலை அடிவாரத்தில் மிகப்பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு மைதானம் தயாராகி வருகிறது. கிரிக்கெட் மைதானத்தைப் போல் இந்த ஜல்லிக்கட்டு மைதானத்தில் பல்வேறு வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 2024- அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கீழக்கரையில் நடைபெறும் என பேசப்பட்டது. இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம்போல் நடைபெற்ற இடத்தில் நடைபெறும் என ஜல்லிக்கட்டு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.
மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்த ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியாளர் சங்கீதா தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் காவல்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்று ஆலோசனைக் கூட்டம் மூன்று ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தும் ஜல்லிக்கட்டு கமிட்டி மற்றும் கால்நடை துறை சுகாதாரத்துறை காவல்துறை சேர்ந்த அதிகாரிகளுடன் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதன்படி தை 1 பொங்கல் அன்று ஜனவரி 15 அவனியாபுரத்திலும் 16 பாலமேட்டிலும் 17 அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம் இதற்காக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இரண்டு கட்டமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது இதில் முதலில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கூட்டம் நடைபெற்றது. தொடர்ச்சியாக இரண்டாவது கட்டமாக பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
உலகப் புகழ்பெற்ற அவனியாபுரம் பாலமேடு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாடுகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு முன்பதிவு ஆன்லைனில் நடைபெறும் என்றும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வழக்கம்போல் நடைபெறும் இடத்தில் தான் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் இந்த கூட்டத்தில தெரிவித்தார். அப்போது ஜல்லிக்கட்டு கமிட்டியினர் கூறுகையில் உள்ளூர் மாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் எந்த ஒரு அசம்பாவிதம் இல்லாமல் மாடுகளை வரிசையாக செலுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர்.
மேலும் சென்னை தொடர்பான செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Cyclone Michaung: ”சென்னையில் 80 சதவீதம் மின் விநியோகம் சரி செய்யப்பட்டுள்ளது" - தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - ”மழை நீர் வடிகாலுக்கு 4 கோடி கூட செலவு செய்யவில்லை” - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி !
சமீபத்திய விளையாட்டு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் விளையாட்டு செய்திகளைத் (Tamil Sports News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion