மேலும் அறிய

போட்டியின் போது சுருண்டு விழுந்து இந்திய தடகள வீரர் மரணம் - கோவாவில் நடந்தது என்ன?

கோவாவில் போட்டியின் போது சுருண்டு விழுந்த தடகள வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவாவில் நடைபெற்ற டிரையத்லான் போட்டியின் போது திடீரென சுருண்டு விழுந்த,  தடகள வீரர் சித்தார்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

சுருண்டு விழுந்த வீரர்:

கோவா மாநிலம் பனாஜியில் அயர்ன்மேன் எனும் தலைப்பில் டிரையத்லான் போட்டி நடைபெற்றது. மிராமர் கடற்கரையில் தொடங்கிய போட்டியில் 50 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் நீச்சல், சைக்கிள் பந்தயம் மற்றும் தொடர் ஓட்டம் ஆகிய விளையாட்டுகள் அடங்கும். அதன்படி, கடந்த ஞாயிறன்று 1.9 கிலோ மீட்டர் தூரம் நீச்சல் மற்றும் 90 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் பந்தயம் ஆகிய போட்டிகளை தொடர்ந்து,  இறுதிப் போட்டியான 21 கிலோ மீட்டர் தூரத்திற்கான தொடர் ஓட்டம் நடைபெற்றது. போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்திய வீரரான கமக்யா சித்தார்த் எல்லைக் கோட்டிற்கான 500 மீட்டர் தூரத்தில் இருந்தபோது திடீரென நிலைகுலைந்து கீழே விழுந்தார்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:

இதைகண்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உடனடியாக சித்தார்த்திற்கு முதலுதவி வழங்கி, அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், “இரண்டு தினங்களாக சிகிச்சை பெற்று வந்த சித்தார்த் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலில் பல உறுப்புகள் செயலிழந்தது தான் மரணத்திற்கு காரணம்” என நிதின் வல்சன் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சித்தார்த்?

உயிரிழந்த சித்தார்த் பீகார் மாநிலம் பாட்னாவைச் சேர்ந்தவர் ஆவார். 26 வயதான இவர் டெக்னாலஜி ஸ்ட்ராடஜி பிரிவில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.  ட்ரையத்லானுக்கான தான் தயாராகி வந்தது தொடர்பான வீடியோக்களை பல வாரங்களாக அவர் இன்ஸ்டாகிரமில் பதிவிட்டு வந்துள்ளார். அதில்  சைக்கிள் ஓட்டுதல் மற்றும் பளுதூக்குதல் தொடர்பான பல வீடியோக்களும் இடம்பெற்றுள்ளன. கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்த்  கொடியசைத்து தொடங்கி வைத்த ஒரு விளையாட்டு போட்டியில், இந்திய தடகள வீரர் ஒருவர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சித்தார்த் குடும்பத்தினருக்கு இரங்கல்:

சித்தார்த் மறைவிற்கு டிரையத்லான் போட்டி ஏற்பாட்டாளர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான அறிக்கையில்,டிரையத்லானில் பங்கேற்ற ஒருவர் இறந்ததை உறுதிப்படுத்துவதில் நாங்கள் வருத்தமடைகிறோம். தொடர் ஓட்டத்தின் போது எல்லைக்கோட்டில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இருந்தபோது, தடகள வீரருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. அவசர மருத்துவப் பணியாளர்கள் உடனடி மருத்துவ உதவியை வழங்கினர்.

தொடர்ந்து, முன்னெச்சரிக்கையாக ரன் கோர்ஸில் நிலைநிறுத்தப்பட்ட ஒரு ஆம்புலன்ஸ் மூலம் தடகள வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஆன்சைட் பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் முதலுதவி அளிப்பவர்களின் விரைவான பணியை நாங்கள் பாராட்டுகிறோம்.  சித்தார்த்தின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.  அவர்களுக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குவோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Embed widget