2022 Year Ender: கோலி முதல் காமன்வெல்த் பதக்கங்கள் வரை..இந்த ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு தருணங்கள்!
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கோலியின் சிறப்பான ஆட்டம் என பல சிறப்புமிக்க தருணங்களை இந்தியா பெருமை கொண்டது. அவற்றை ஒரு தொகுப்பாக கீழே காணலாம்.
2022 ம் ஆண்டு இந்திய அணி பல விளையாட்டு தொடர்களில் சிறப்பாக செயல்பட்டது. தாமஸ் கோப்பையில் இந்திய பேட்மிண்டன் அணி சிறப்பாக செயல்பட்டது. டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான கோலியின் சிறப்பான ஆட்டம் என பல சிறப்புமிக்க தருணங்களை இந்தியா பெருமை கொண்டது. அவற்றை ஒரு தொகுப்பாக கீழே காணலாம்.
நீரஜ் சோப்ரா:
காயம் காரணமாக காமன்வெல்த் போட்டிகளில் நீரஜ் சோப்ரா பங்கேற்க முடியவில்லை. இருப்பினும், இந்தியாவின் முதல் டயமண்ட் லீக் பட்டத்தை வென்ற நீரஜ் சோப்ரா இவ்வருடம் ஒரு அற்புதமான ஆண்டை அனுபவித்தார். அவர் இவ்வருடத்தில் 2022 உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தைப் வென்று, அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு உலகளாவிய நிகழ்வில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆனார்.
தாமஸ் கோப்பை:
HISTORIC FEAT 🚨#TeamIndia defeats 14-time #ThomasCup Champions Indonesia (🇮🇳3-0🇮🇩) in a dominating fashion to win its 1️⃣st ever #ThomasCup2022 🔥🔥
— SAI Media (@Media_SAI) May 15, 2022
Fantastic effort from our BOYS displaying Masterclass Game & TEAM SPIRIT 🙇♂️🙇♀️
Job Done Guys
MISSION ACHIEVED 😎#IndiaontheRise pic.twitter.com/B5Y3n5myEk
இந்திய பேட்மிண்டன் வரலாற்றில் மிகச்சிறந்த தருணங்களில் ஒன்று. மதிப்புமிக்க தாமஸ் கோப்பையை 14 முறை சாம்பியனான இந்தோனேசியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியதன் மூலம் இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி வரலாறு படைத்தது. லக்ஷ்யா சென் மற்றும் கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் தங்களது ஒற்றையர் ஆட்டங்களில் முறையே நடப்பு சாம்பியனான இந்தோனேசியாவின் அந்தோனி சினிசுகா ஜின்டிங் மற்றும் ஜொனாடன் கிறிஸ்டியை தோற்கடித்து கோப்பை வென்றனர்.
'கோல்டன் பாய்ஸ்' சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி & சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றனர். முறையாக இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று அசத்தியது. 73 ஆண்டுகால தாமஸ் கோப்பை வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.
பாகிஸ்தான் எதிராக கோலி பேட்டிங்:
A packed MCG chanting for Virat Kohli 🏟
— ICC (@ICC) October 23, 2022
Raw vision: Behind the scenes of India’s sensational win 📹
Goosebumps. #T20WorldCup | #INDvPAK pic.twitter.com/MNjmOLKO7r
உலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதினர். இதில், இந்திய அணி பாகிஸ்தான் நிர்ணயித்த 160 ரன்களை துரத்தியது. அப்போது, இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 31/4 என போராடிக்கொண்டிருந்தது. இந்திய வீரர் விராட் கோலி தனி ஒருவனாக பாகிஸ்தானிடம் இருந்து போட்டியை பறித்து இந்தியாவுக்கு வெற்றி பெற்று தந்தார். அவர் ஆட்டமிழக்காமல் 82 ரன்கள் எடுத்து இந்திய அணியை வெற்றிபெற செய்தார்.
பிசிசிஐ அறிவித்த ஒரே மாதிரியான ஊதியம்:
BCCI announces the implementation of pay equity policy for contracted Indian women cricketers. The match fee for both Men and Women Cricketers will be the same. pic.twitter.com/XlAHnzZAdK
— ANI (@ANI) October 27, 2022
ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்கும் ஒரே மாதிரியான சம்பளம் வழங்கப்படும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அவர்கள் டெஸ்ட் போட்டிக்கு 15 லட்ச ரூபாயும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்ச ரூபாயும், டி20க்கு 3 லட்ச ரூபாயும் பெறுவார்கள். பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “பிசிசிஐ பாகுபாட்டைச் சமாளிப்பதற்கான முதல் படியை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். நாங்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிசிசிஐ மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஊதிய சமபங்கு கொள்கையை செயல்படுத்தி வருகிறோம். கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்தின் புதிய சகாப்தத்திற்கு நாம் செல்லும்போது ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் வீரர்களுக்கான போட்டிக் கட்டணம் ஒரே மாதிரியாக இருக்கும்" என தெரிவித்தார்.
காமன்வெல்த் போட்டி:
காமன்வெல்த் போட்டிகள் லண்டனின் பிர்மிங்ஹாம் நகரில் கடந்த ஜுலை மாதம் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. இந்திய அணி மொத்தமாக 22 தங்கம் உட்பட 61 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தது.