![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Varalakshmi Vratham 2024: செல்வத்தை பெருக்கும் வரலட்சுமி விரதம் எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?
வீட்டில் செல்வ செழிப்பை அதிகரிக்கும் வரலட்சுமி பூஜை எப்போது வருகிறது? பூஜை செய்வதற்கு ஏற்ற நேரம்? ஆகியவை குறித்து கீழே விரிவாக காணலாம்.
![Varalakshmi Vratham 2024: செல்வத்தை பெருக்கும் வரலட்சுமி விரதம் எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம் எது? Varalakshmi Vratham 2024 date and pooja timing know full details here Varalakshmi Vratham 2024: செல்வத்தை பெருக்கும் வரலட்சுமி விரதம் எப்போது? பூஜை செய்ய உகந்த நேரம் எது?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/11/bfff35d0774c91aeaa7ce92fed3bdf7f1723369863562102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வீட்டிற்கு செல்வ செழிப்பையும், வீட்டில் நன்மைகளையும் பெருக்கும் பூஜைகளில் ஒன்றாக கருதப்படுவது வரலட்சுமி பூஜை. பெரும்பாலான வீடுகளில் வரலட்சுமி பூஜையை பெண்கள் செய்கின்றனர். இவ்வாறு செய்வதால் வீட்டில் நன்மைகள் பெருகி செல்வம் செழிக்கும் என்பது நம்பிக்கை ஆகும்.
வரலட்சுமி பூஜை:
வரலட்சுமி விரதம் என்பது மகாலட்சுமியை வீட்டிற்கு அழைத்து வழிபடும் பூஜையாகும். வரலட்சுமி பூஜை பெரும்பாலும் பெண்களால் செய்யப்படுகிறது. பெண்கள் தங்களது கணவர் வீடு அல்லது அம்மா வீடு என எங்கு வேண்டுமானாலும் வரலட்சுமி பூஜை செய்யலாம்.
வரலட்சுமி பூஜையை வரலட்சுமியின் படம் வைத்தோ அல்லது கலசம் வைத்தோ வழிபடலாம். வரலட்சுமி பூஜை 3 நாட்கள் கடைபிடிக்கப்படுகிறது. பொதுவாக வியாழக்கிழமை வரலட்சுமியான மகாலட்சுமியை அழைத்து, வெள்ளிக்கிழமை வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. பின்னர், சனிக்கிழமை வரலட்சுமி புனர்பூஜை செய்து வழிபடப்படுகிறது. மூன்று நாட்கள் வரலட்சுமி பூஜை செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமை நாளில் மட்டும் வரலட்சுமி பூஜை செய்யலாம்.
வரலட்சுமி பூஜை எப்போது?
வரலட்சுமி விரதம் எனப்படும் வரலட்சுமி பூஜை நடப்பாண்டில் இந்த ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை வருகிறது. ஆடி கடைசி வெள்ளியான வரும் ஆகஸ்ட் 16ம் தேதி வரலட்சுமி பூஜை வருகிறது. அதே நாளில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி மற்றும் துவாதசி திதிகள் சேர்ந்த நாளாகவும் அமைகிறது. மேலும், பூராடம் நட்சத்திரமும், மூல நட்சத்திரமும் இணைந்து வருகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த நாளில் வரலட்சுமி பூஜை வருவது கூடுதல் சிறப்பாகும்.
மகாலட்சுமியை வீட்டிற்கு அழைக்க ஏற்ற நேரம் எது?
ஆகஸ்ட் 15ம் தேதி - மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை
ஆகஸ்ட் 16ம் தேதி – காலை 6 மணி முதல் காலை 7.20 மணி வரை
வரலட்சுமி பூஜை செய்வதற்கான ஏற்ற நேரம் எது?
ஆகஸ்ட் 16ம் தேதி – காலை 9 மணி முதல் காலை 10.20 மணி வரை
ஆகஸ்ட் 16ம் தேதி – மாலை 6 மணிக்கு மேல்
புனர்பூஜை செய்வதற்கான நேரம்:
ஆகஸ்ட் 17ம் தேதி – காலை 7.35 மணி முதல் காலை 8.55 மணி வரை
- காலை 10.35 மணி முதல் மதியம் 12 மணி வரை
ஆகஸ்ட் 18ம் தேதி - காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
- காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
இந்த நேரத்தில் வரலட்சுமி பூஜை செய்தால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியமும், பொருளாதாரமும் அதிகரித்து செல்வ செழிப்புடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)