மேலும் அறிய

Vaikasi Amavasya : இன்று வைகாசி அமாவாசை: அதன் சிறப்புகள் என்னென்ன? செய்யக்கூடியவையும் செய்ய கூடாதவையும்!

அமாவசை ஒரு புனித நாள். இது உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கியமும் முன்னேற்றமும் தரக் கூடியது. அமாவாசை விரதம் இந்துக்களால் மாதம்தோறும் கடைபிடிக்கப்படுகிறது. வைகாசி மாத அமாவாசை நாளை (மே 19) வெள்ளிக்கிழமை வருகிறது.

அமாவசை ஒரு புனித நாள். இது உங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு ஆரோக்கியமும் முன்னேற்றமும் தரக் கூடியது. அமாவாசை விரதம் இந்துக்களால் மாதம்தோறும் கடைபிடிக்கப்படுகிறது. வைகாசி மாத அமாவாசை இன்று (மே 19) வெள்ளிக்கிழமை வருகிறது. 

அதுவும் வைகாசி மாதம் வரும் அமாவாசை மிகவும் சிறப்பானது. வளங்களை அள்ளித் தரக்கூடியது. மாதவ மாதம் என்றும் வைகாசம் என்றும் இந்த மாதத்தை அழைப்பார்கள். வைகாசி மாதத்தில் புனித நதியில் நீராடிவிட்டு மகா விஷ்ணுவிற்கு துளசி இலைகளைக் கொண்டு பூஜை செய்வோருக்கு நற்பேறு கிடைக்கும் என விஷ்ணு புராணம் கூறுகிறது.

வைகாசி மாதம் வரும் அமாவாசையில் முன்னோர்களை வழிபாட்டால் சுபிட்சம் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

வைகாசி அமாவாசை எப்போது தொடங்குகிறது?

சித்திரை முடிந்து வைகாசியில் இன்று மே 19 வெள்ளிக் கிழமை அமாவாசை வருகிறது. நேற்று இரவு 10.09 மணிக்கு அமாவாசை திதி தொடங்கியது. இன்று மே 19 இரவு 9.47 வரை மணி வரை இந்த திதி நீடிக்கிறது.
இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் இந்த அமாவாசை முருகனுக்கு உகந்த கிருத்திகை நட்சத்திர நாளில் வருகிறது. இதனால் முன்னோர்கள் ஆசியோடு முருகனின் பூரண அருளும் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
அமாவாசை நாளில் தர்ப்பணம் கொடுத்த பின்னர் சிவன் அல்லது முருகன் கோயிலுக்குச் செல்வது நலம் பயக்கும்.

இன்றைய தினம் பசுவுக்கு பச்சரிசி, பாசிப்பருப்பு, வெல்லம் கலந்து தானமாக வழங்கினால் கோமாத அருள் நிறைவாகக் கிட்டும். மேலும் வைகாசி அமாவாசை வழிபாடு நீண்ட ஆயுள், செல்வ வளம், குழந்தை பாக்கியம் தரும்.

அமாவாசை தினத்தில் ஆண்கள் விரதமிருந்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதே சமயம் சுமங்கலி பெண்கள் கண்டிப்பாக அமாவாசை விரதம் இருக்கக்கூடாது என்று சாஸ்திரம் சொல்லுகிறது. பெண்கள் அமாவாசை விரதம் இருப்பதில் சில விதிமுறைகள் நிறைந்திருக்கிறது. முன்னோர்களுக்கு பிடித்த உணவுகளை மதிய உணவிற்கு சமைத்து அதை மறைந்த முன்னோர்களின் புகைப்படங்களுக்குப் பொட்டு வைத்து, பூ வைத்து படைக்க வேண்டும். அவ்வாறு சமைக்கும் காய்கறிகளில் சிலவற்றை பயன்படுத்தக்கூடாது.   அதேப்போன்று சில காய்கறிகளை சேர்த்து சமைத்தால் வீட்டிற்கு நன்மையை உண்டாக்கும் என்பது ஐதீகம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடியவை:

மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஆடி அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளய அமாவாசை, தை அமாவாசை போன்றவை சிறப்பு வாய்ந்த நாட்களாகும்.

அன்றைய தினம் ஒரு அரச மரத்தின் கீழ் கடுகு எண்ணெய் தீபம் ஏற்றுவது நல்லது.

காலையில் சீக்கிரம் எழுந்து சிவன், விஷ்ணுவை வணங்க வேண்டும்.

பூமியில் ஒரு ஸ்பூன் பால் ஊற்ற வேண்டும். அது உங்கள் வாழ்வில் இடையூறுகளை தாண்டிவர உதவும்
சனி கோயிலில் கடுகு எண்ணெய், கருப்பு உளுந்து, இரும்புத் துண்டு, நீல மலர் தானமாகக் கொடுத்து வணங்கவும் சனி மந்திரத்தை 101 முறை ஜெபிக்கவும்   'Om Nilanjansamabhas Ravuputra Yamagrajam.

Chayamartandsambhut Namami Shanaishchara’ என்பது தான் அந்த மந்திரம். இது கோபம், கெட்ட பலன்கள் ஆகியனவற்றை நீக்கும்.

பசு மாட்டுக்கு பழங்கள் வழங்கலாம். இதனால் குடும்பத்தில் அமைதியும், ஒற்றுமையும் ஓங்கும். நீரில் எள்ளை கரைத்து வேண்டிக் கொள்ளலாம்.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை:
இந்த நாளில் எந்த ஒரு நல்ல காரியமும் செய்யக்கூடாது
துளசி இலையை பறிக்கக் கூடாது
இந்த நாளில் இறைச்சி, முட்டை, மீன், வெங்காயம், பூண்டு உண்ணக் கூடாது
நீண்ட தூரம் பயணம் கூடாது
வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடாது
வீட்டில் சண்டை சச்சரவுகள் கூடாது
கடுமையான சொற்களை பயன்படுத்தக்கூடாது
சந்திர காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும்
21 முறை மூக்கின் இடது நாசி வழியாக சுவாசிக்கவும். அப்போது வலது மூக்கை மூடிக் கொள்ள வேண்டும். இடது காலை முதலில் எடுத்து வைத்து வெளியில் செல்ல வேண்டும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vivek Ramaswamy DOGE Resign : பதவியேற்ற TRUMP..BYE சொன்ன விவேக்! திடீர் TWISTJagabar Ali Murder : ’’அநியாயம் பண்றாங்க’’அதிமுக நிர்வாகி படுகொலைஇறக்கும் முன் கடைசி வீடியோKomiyam Drinking Fact Check | கோமியம் குடிச்சா நல்லதா?IIT காமகோடி Vs மனோ தங்கராஜ் உண்மை நிலை என்ன?Appavu walk out : ஆளுநர் ரவி சர்ச்சை அப்பாவு வெளிநடப்பு !பீகார் சபாநாயகர்கள் மாநாடு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Australian Open 2025: ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
ஜோகோவிச், ஸ்வெரேவ் அசத்தல்.. ஆஸ்திரேலியன் ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்தனர்...
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
சந்திராயன் 4 எப்போது? ..இந்திய விண்வெளிப் பொருளாதாரம் 800 கோடி டாலராக அதிகரிப்பு.!
"பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது" ஆளுநர் ரவி பேச்சு
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
கிரிக்கெட் ரசிகர்களே! சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்.. எப்போ தெரியுமா?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
SSC MTS Result 2024 OUT: எஸ்.எஸ்.சி - எம்.டி எஸ் தேர்வு முடிவு வெளியானது.! கட் ஆஃப் எவ்வளவு ?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துருக்கி ரிசார்ட்டில் தீ விபத்து - 66 பேர் பலி; 51 பேர் படுகாயம் - நடந்தது என்ன?
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
துப்பாக்கி சுடும் பயிற்சி; எல்லை தாண்டி மீன் பிடிக்காதீங்க - தமிழக மீனவர்களுக்கு எச்சரிக்கை
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
பரந்தூரில் ஏர்போர்ட் - பயப்படாதீங்க: விடாப்பிடியாக விளக்கம் கொடுக்கும் தமிழக அரசு 
Embed widget