மேலும் அறிய

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்: வெள்ளித் தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! கண்கவர் வானவேடிக்கை!

"காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் வெள்ளி தேர் உற்சவம் மிக விமர்சையாக நடைபெற்றது."

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வெள்ளி தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஒரு மணி நேரம் தொடர் கண்கவர் வானவேடிக்கையை ஆயிரம் கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர்

மாசி பிரம்மோற்சவ விழா

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவத்தினையொட்டி வெள்ளித் தேர் உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. சக்தி பீட தலங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் கடந்த 21-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல், நாள்தோறும் காலை மாலை என இரு வேளைகளில் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.

வெள்ளித்தேர் உற்சவம்

பிரம்மோற்சவத்தின் முக்கிய உற்சவமான 9-ம் நாள் இரவு வெள்ளி தேர் உற்சவத்தில் ஆரஞ்ச், ஊதா நிறபட்டு உடுத்தி, திருவாபரணங்கள் அணிந்து, மனோரஞ்சிதப்பூ, செண்பகப் பூ, மல்லிகைப்பூ மலர் மாலைகள், சூடி, காஞ்சி காமாட்சியம்மன் வெள்ளிக் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நான்கு ராஜ வீதி வழியாக வெள்ளி தேரில் பவனி வந்த காமாட்சியம்மனை காண உள்ளூர் மற்றும் வெளியூரென ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆங்காங்கே காத்திருந்து சாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர். 

வெள்ளித்தேர் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் முன்பு வந்த போது, விண்ணை பிளக்கும் வகையில் சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற கண்கவர் வண்ண வண்ண வான வேடிக்கைகளை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்து சென்றனர். விடுமுறை தினத்தில் வெள்ளித்தேர் உற்சவம் நடைபெற்றதால், வழக்கத்தை விட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வெள்ளித்தேர் உற்சவம் மற்றும் வான வேடிக்கை காண குவிந்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்: வெள்ளித் தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! கண்கவர் வானவேடிக்கை!
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில்: வெள்ளித் தேர் திருவிழாவில் குவிந்த பக்தர்கள்! கண்கவர் வானவேடிக்கை!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
மோடியின் மதுரை முழக்கம்: திமுக ஆட்சி மாற்றத்திற்கான சூறாவளி... தேஜகூ கூட்டணி தரும் மாற்றங்கள்!
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
திருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமர் மோடி: எதிர்பாராத தரிசனம்.. பாதுகாப்பு, மரியாதை, சுவாரசியம் என்ன?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK
TVK Flag Accident | தலையில் விழுந்த கொடிக்கம்பம் பேச்சை நிறுத்தாத நாஞ்சில் தவெக மேடையில் பரபரப்பு
Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Israel Iran Conflict: ஈரான் தாக்குதல்.. சின்னபின்னமான வளைகுடா நாடுகள்.. பிரதமர் மோடி கண்டனம்!
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Gambhir Samson: ”என்னமா உருட்டுற மேன் நீ” சாம்சனை பாராட்டிய கம்பீர் - சண்டைக்கு வந்த நெட்டிசன்கள்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
Sanju Samson: ஆண்டவரே..! தீயாய் பரவும் சஞ்சு சாம்சனின் வீடியோ, அரையிறுதியில் இந்தியா எங்கு? யாருடன்? மோதும்
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
IND vs WI: சிங்கம் போல சீறிய சாம்சன்.. கெத்தா அரையிறுதியில் நுழைந்த இந்தியா! வெளியேறிய வெஸ்ட் இண்டீஸ்!
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
Congress: ஒத்த சீட்டுக்கு மல்லுகட்டு.. தமிழக காங்கிரசுக்கு அல்வா தரப்போகிறாரா ராகுல் காந்தி?
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
MK Stalin Birthday: நலத்திட்டங்கள், அன்னதானம்.. திருவிழா போல கொண்டாடப்பட்ட மு.க.ஸ்டாலின் பிறந்தநாள்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
’’எந்த சாதிக்கு கல்வி இல்லை என்றார்களோ அந்த சாதியில் பிறந்த நான் உயர் கல்வித்துறை அமைச்சர்’’- கண்ணீர்விட்ட அமைச்சர் கோவி செழியன்!
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
DMK Congress Alliance: ஆட்சியில் பங்கா? கப்சிப் ஆன காங்கிரஸ்.. கூலாக டீல் செய்யும் திமுக! எப்படி?
Embed widget