சிவ பக்தர்களே.... திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் இதுதான்
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கிரிவலம் செல்ல உகுந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நினைத்தாலே முக்திதரும் கோயில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆகும். கோயிலின் பின்புறத்தில் சிவனே மலையாக எழுந்தருளியிருப்பதால், மாதந்தோறும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் வந்து வழிபடுகின்றனர். திருவண்ணாமலையில் வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல வரும் 23ம் தேதி இரவு உகந்தது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பக்தர்கள் தரிசனத்துக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வைகாசி மாத பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் வரும் 22ம் தேதி புதன்கிழமை இரவு 7.16 மணிக்கு தொடங்கி, 23ம் தேதி வியாழக்கிழமை இரவு 7.51 மணிக்கு நிறைவடைகிறது. எனவே, 22ம் தேதி இரவு கிரிவலம் செல்ல உகந்தது என அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வரும் பௌர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்திருக்கிறது.
கோடை விடுமுறை பக்தர்கள் அதிக அளவில் கிரிவலம் வரவாய்ப்பு
அதோடு, மட்டுமின்றி கோடை விடுமுறை நாட்கள் என்பதால், திருவண்ணாமலை அன்னமணலையார் கோயிலுக்கு பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் கோடைவிடுமுறை என்பதால் இந்த பௌர்ணமியன்று கிரிவலம் வருவதற்கு பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனையொட்டி, கிரிவல பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் விரிவாக செய்திட மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் திட்டமிட்டுள்ளன. மேலும், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய கோயில் வளாகத்திலும் வெளிப்புறங்களில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தும் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து இயக்கம்
அதேபோன்று, வழக்கம் போல சென்னை கடர்கரையில் ரயில் நிலையத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பௌர்ணமி சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது. அதோடு, வரும் 23ம் தேதி முதல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணி, ஆற்காடு வழியாக 44 பேருந்துகளும், காஞ்சிபுரம், வந்தவாசி வழித்தடத்தில் 11 பேருந்துகளும் வழக்கமாக தினசரி திருவண்ணாமலைக்கு இயக்கப்படும் நிலையில், கூடுதலாக 30 பேருந்துகள் உள்பட மொத்தம் 85 பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்திருக்கிறது. அதுதவிர, சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து, திண்டிவனம், செஞ்சி வழியாக வழக்கம் போல் தினமும் 90 பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலையில் 8 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்களும் அமைக்கப்பட்ட உள்ளது.