மேலும் அறிய

WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்

WTC 2025 Points Table Updated: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு மூன்றாவது முறையாக முன்னேறும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது.

WTC 2025 Points Table Updated: பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு எதிரான, 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது.

பார்டர் கவாஸ்கர் தொடரை இழந்த இந்தியா:

சிட்னியில் நடைபெற்ற போட்டியில் 162 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய, ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டியது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட், 3-1 என ஆஸ்திரேலியே கைப்பற்றியது.  சுமார் 11 ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியா அணி பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரை வசப்படுத்தியுள்ளது. மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை உறுதி செய்துள்ளது. இதன் மூலம் நடப்பு நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா வரும்ஜூலை 11-15 க்கு இடையில், லார்ட்ஸில் நடைபெறும் WTC 2025 இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவைச் சந்திக்கும்.

WTC ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா:

அதேநேரம், இந்திய அணி சிட்னி டெஸ்ட் தோல்வியால், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது. முன்னதாக, கடந்த 2021 மற்றும் 2023ம் ஆண்டுகளில் நடைபெற்ற, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. இதனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறி, முதல்முறையாக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இறுதிப்போட்டிக்கு கூட இந்திய அணி தகுதி பெறவில்லை.  2023-2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான சுழற்சியில் 9 வெற்றிகள், 8 தோல்வி மற்றும் 2 டிராக்களுடன், வெற்றி சதவிகிதம் 52.77 லிருந்து 50.00 ஆகக் குறைந்துள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 ​​புள்ளிப்பட்டியல்:

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி ட்ரா புள்ளிகள் PCT
தென்னாப்பிரிக்கா (கே) 11 7 3 1 88 66.67
ஆஸ்திரேலியா (கே) 17 11 4 2 130 63.72
இந்தியா 19 9 8 2 114 50.00
நியூசிலாந்து 14 7 7 0 81 48.21
இலங்கை 11 5 6 0 60 45.45
இங்கிலாந்து 22 11 10 1 114 43.18
பங்களாதேஷ் 12 4 8 0 45 31.25
பாகிஸ்தான் 11 4 7 0 40 30.30
வெஸ்ட் இண்டீஸ் 11 2 7 2 32 24.24
 

புரட்டிப்போட்ட நியூசிலாந்து தொடர்:

நடப்பு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான சுழற்சியில் இந்திய அணி, கடந்த ஆண்டு வரை ஆதிக்கம் செலுத்தி வந்தது. நியூசிலாந்திற்கு எதிரான உள்நாட்டு தொடருக்கு முன்பு வரை, இந்திய அணி 8 வெற்றிகள் பெற்று இருந்த நிலையில், 2 போட்டிகளில் மட்டுமே தோல்வி கண்டு இருந்தது. இதனால், நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி, இந்தியா இறுத்ப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக இந்திய அணி, சொந்த ரசிகர்களுக்கு முன்பே தொடரை 3-0 என இழந்து ஒயிட் வாஷ் ஆனது. அதைதொடர்ந்து, ஆஸ்திரேலியா தொடரை வெற்றிகரமாக தொடங்கினாலும், 3-1 என தொடரை இழந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறும் கனவு தவிடுபொடியாகியுள்ளது. புள்ளிப்பட்டியலில் முதல் இடம்பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அத்தனையும் தற்போது தலைகீழாக மாறியுள்ளது.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Devdutt Padikkal: 4 வருட இடைவெளி.. வந்த வேகத்தில் செஞ்சுரி! தடைக்கல்லை உடைத்த படிக்கல்! மிடில் ஆர்டரை சுமப்பாரா?
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
Watch Video: பாவம்யா ஜெய்ஸ்வால்.. இப்படிலாமா ரன் அவுட் ஆவாங்க? நீங்களே பாருங்க
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL 1st Test: முதல் டெஸ்ட்.. காலேவில் இன்று களமிறங்கும் இந்தியா! இலங்கையை வீழ்த்தி சுதந்திர தின விருந்தளிக்குமா சுப்மன் படை?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?
IND vs SL: இந்தியாவை சமாளிக்குமா இலங்கை? காலேவில் நாளை தொடங்குது முதல் டெஸ்ட்! வெற்றி யாருக்கு?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
Udhayanidhi: ”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
”மூளை இல்லாத கூட்டம், முன்ஜாமின் வாங்கனும்” - CM விஜயை கடுமையாக விமர்சித்து பேசிய உதயநிதி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
Air India: ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
ஏர் இந்தியா விமான பயணி துப்பாக்கிச் சூடு - பணியார்கள் 2 பேர் காயம் - நடந்தது என்ன? எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
பொலிவும் ஸ்டைலும் மாறவே இல்ல; புது அப்டேட்டுடன் மஹிந்திரா பொலிரோ- EMI மூலம் ஈஸியாக வாங்குவது எப்படி?
Embed widget